அதிமுகவினர் இடையூறு செய்தால் புகார் அளிக்கலாம் – அஇஅதிமுக

  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாகக்கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.   இது தொடர்பாகத் தமிழ் இந்து நாளிதழுக்கு அதிமுக நிருவாகி ஒருவர் அளித்த பேட்டியில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாகக் கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம். 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்…

உங்கள் ‘தேசிய’த்தில் சென்னை இல்லையா? – வெ.சந்திரமோகன்

உங்கள் ‘தேசிய’த்தில் சென்னை இல்லையா?   மழை எவ்வளவோ அசிங்கங்களை வெளிக்கொண்டு வருவதுபோல ஊடகங்களின் அரசியலையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தைப் பெருமளவில் பாதித்த – குறிப்பாகச் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் முதலான மாவட்டங்களில் பெய்த – கனமழையும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளமும் சேதங்களும் வட இந்திய ஊடகங்களின் கவனத்துக்குச் சென்றதாகவே தெரியவில்லை.   “வட இந்திய மாநிலங்களில் நிகழும் எந்தச் செய்தியானாலும் பரபரப்பாக வெளியிடும் ஆங்கிலம், இந்தி அலைவரிசைகள், செய்தித் தாள்கள் சென்னை வெள்ளத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. சீனா போரா கொலை…

சென்னை வெள்ளம் கடலூரை மூழ்கடித்து விட்டதா? – என்.முருகவேல்

கடலூரில் இடைவிடாத கொட்டும் மழை!   கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாவட்ட மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். நவ.9 பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்டு, 66 உயிர்களை பலிவாங்கியது. இந்த நிலையில் ஆறுதல் தரும் விதமாக மழை சற்று விட்டு விட்டுப் பெய்த நிலையில் துயரீட்டு உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன.   இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாகப் பெய்துவரும் கனமழையால் மாவட்டம் மீண்டும் தத்தளிக்கிறது. கெடிலம், தென்பெண்ணையாறு, பரவானாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது….

மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற விக்கிரமனின் இறுதிச் சடங்கு – மானா பாசுகரன்

மழை பாதிப்பினால் மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற புகழ்மிகு எழுத்தாளர் விக்கிரமனின் இறுதிச் சடங்கு: சென்னையில் 4 நாள் அவதிக்குப் பிறகு எரியூட்டல்  கடந்த 1-ஆம் நாள் புகழ்மிகு எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் உறைகலன் பேழை கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4- ஆம் நாள் நண்பகல் எரியூட்டப்பட்டது.   ‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘இராசராசன் சபதம்’ முதலான புதினங்களை எழுதியவர்…