தமிழில் முதல் இடை, கடை, என முச்சங்கங்கள் இருந்தன என்பதும் முதலது கடலுட்பட்ட குமரி பஃறுளி நாடுகளிலமைந்த தென்மதுரையிலும், இடையது அதே இடத்தில் கவாடபுரத்திலும், மூன்றாவது வைகைக்கரை மதுரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வு பெற்றிருந்தன என்பதும் நெடுநாளைய தமிழ்நூல் மரபு. ஒரு சாய்பின்றி ஆய்பவர்கட்குச் சங்ககால வாழ்வின் தன்மை மலைமேலிட்ட விளக்கம் ஆகும். இரண்டு தலைமுறைகளில் இயற்றப்பட்ட கடைச் சங்க இலக்கியமே பன்னூறாக, பல்நாடு, பல்வகுப்பு, பல்தொழில் ஆன பல்வகைப்பட்ட புலவர்களை உடையது. தொகை மிகுந்ததனால் தன்மை குறையவும் இல்லை. சங்கச் செய்யுள்களில்…