தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! பா.ச.க.விற்குத் தமிழ்ப்பற்று இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தவர்களிடம் தன் உண்மை முகத்தைப் பாசக காட்டியுள்ளது. இரு நாளுக்கு முன்னர் கருநாடகா மாநிலம் சிவமோகா நகரில்தான், துணிவாகத் தன் முகமூடியைக் கழற்றி எறிந்துள்ளது பா.ச.க. தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வந்த பாசக நிகழ்ச்சித் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கத் தொடங்கியதும் இடையிலேயே நிறுத்தச் செய்துள்ளது. அவ்வாறு நிறுத்தச் சொன்னது பாசகவின் மூத்த தலைவரும் அத்தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினருமான ஈசுவரப்பாதான். அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தவகளில் ஒருவர் தமிழ்நாட்டுப் பாசக தலைவரும்,…

அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும். சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி…

விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

  விசயேந்திரனைக் கண்டிப்பது ஏன்?  காஞ்சி மாநகருக்குக் களங்கம் எற்படுத்தும் வகையில்  அமைந்ததுதான்  காமகோடி மடம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே புகழுறும் மடம் இது. எப்படி ஆரிய மொழியின் காலத்தை முன்னுக்குத்தள்ளி ஏமாற்றுகிறார்களோ – எவ்வாறு தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துவிட்டு அவற்றைத் தமிழ் இலக்கியக் காலத்திற்கு முந்தையன எனக் காட்டுகின்றார்களோ – அப்படித்தான்  இம்மடத்தின் தொன்மைக் கற்பிதமும். பிற மடங்களாலேயே இம்மடம் பிற்பட்டது எனவும் 1821 இல்  கும்பகோணத்தில்  தொடங்கப்பெற்ற மடமே 1842 இற்குப்பின்னர் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது…

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 – கருமலைத்தமிழாழன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8   தமிழ்த்தாய் வாழ்த்து   கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத   தமிழன்னையை   வணங்கு  கின்றேன் !   அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும் அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும் மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும் மணிப்பிரவாள நடையினில் எழுதி யுள்ளே பிணியாக…

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! – பாரதிதாசன்

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ? சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ? செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே! நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போலே செழித்தஎன்…

தமிழன்னையே! பொறுத்தருள்! – கவிக்கோ ஞானச்செல்வன்

வாழிதமிழ் அன்னை வாழி! உளத்தினில் இனிப்பவள் உயிரினுள் தழைப்பவள் உழைப்பினில் சிரித்து நிற்பாள்! உலகினர் மகிழவே உயர்தனிச் செம்மொழி உருவுடன் இலங்கு கின்றாள்! வளத்தினில் நிகரிலள் வாழ்வினைத் தருபவள் வடிவினில் கன்னி யாவாள் வற்றாத நூற்கடல் வளர்புகழ் கொண்டனள் வாழிதமிழ் அன்னை வாழி! களத்தினில் வெற்றியே கண்டனள் தமிழர்தம் கருத்தினுள் நிறைவு பெற்றாள்! கனவுகள் ஆயிரம் கற்பனைப் பாயிரம் காணவே அருளு கின்றாள்! குளத்தினில் தாமரை கோடுயர் இமாலயம் குன்றாத புகழில் வானம்! குலவுதமிழ் அன்னையே குறைகளைப் பொறுத்தருள் கூட்டுவாய் வாழி நாளும்! [1980…

இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

 11 : தமிழே இன்பம்! – முடியரசன்   தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?   பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்.   “பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே!…

இனிதே இலக்கியம் – 10: முதல் நாவை யசைத்த மொழி – அ.வரத நஞ்சையப்பர்

 10 தமிழன்னையை வாழ்த்துவோம்! நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்த மொழி- எங்கள் கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக் கருத்தோ டிசைந்த மொழி- எந்தம் எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந் திருந்து திருந்து மொழி- வேற்று வண்ணப் பிறமொழி கற்க வுதவிய வண்மைபொ ருந்தும் மொழி- அதனால் எங்கள் தமிழன்னை வாழிய வாழிய வென்றடி வாழ்த்துவமே! தாராமங்கலம் புலவர் அ. வரதநஞ்சைய(பிள்ளை) அவர்கள் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ நூலில்   வரும் தமிழ் வாழ்த்துப் பாடல்.    “மழலைப்பருவத்தில் முதல் முதலில் நாவை அசைத்துப் பிறந்த…

நிலைபெறநீ வாழியவே! – கவிஞர் சீனி நைனா முகம்மது

  காப்பியனை ஈன்றவளே!      காப்பியங்கள் கண்டவளே!    கலைவளர்த்த தமிழகத்தின்      தலைநிலத்தில் ஆள்பவளே! தாய்ப்புலமை யாற்புவியில்      தனிப்பெருமை கொண்டவளே!   தமிழரொடு புலம்பெயர்ந்து      தரணியெங்கும் வாழ்பவளே! எங்களெழில் மலைசியத்தில்         சிங்கைதனில் ஈழமண்ணில்    இலக்கியமாய் வழக்கியலாய்         இனக்காவல் தருபவளே! பொங்கிவளர் அறிவியலின்         புத்தாக்கம் அத்தனைக்கும்    பொருந்தியின்று மின்னுலகில்         புரட்சிவலம்…