(தோழர் தியாகு எழுதுகிறார் 101 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7 தொடர்ச்சி) தமிழ்நாடா? தமிழகமா?  அன்பர் இரவி (பரிவாதினி நூலகம்) கேட்கிறார்: தமிழ்நாடா? தமிழகமா? +++ இரண்டும்தான்! இலக்கியத்தில் இரு பெயர்களும் ஆளப்படுகின்றன. இது வரை கிடைத்துள்ள சான்றுகளின் படி சிலப்பதிகாரம்தான் முதன் முதலாகத் தமிழ்நாடு என்ற பெயரைக் குறிப்பதாக அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுகின்றார்கள். “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை யாயின்…” சிலப்பதிகாரம் வஞ்சிக் காதையில் அமைச்சர் வில்லவன் கோதையின் கூற்றாக இது இடம் பெறுகிறது. கடல்சூழ்ந்த இந்நாட்டினை நீ தமிழ்நாடாக்க விரும்பினால் எதிர்ப்பவர்கள்…