சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

இர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கிளிநொச்சிக் கமுக்க (இரகசிய) முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? து.வரதராசா:: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய ஊர்தியில் வவுனியா மருத்துவமனைக்குப் பண்டுவத்துக்காக அனுப்புவதாகத்தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பேருந்திலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சிறிது நேரத்தில் திரும்பி…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 02 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 2/6 இர.சிறீகந்தராசா: இந்த இறுதிப் போரிலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்கிற சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், “1,46,000 பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது” என்ற கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதே நேரத்திலே, ஐக்கிய நாடுகள் அவை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று சில இடங்களிலே கூறியது. நான் சென்ற ஓர் இடத்தில், ஐ.நா.,வின் முன்னாள் அலுவலர்…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 1/6   நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழத் தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் எதிர்வுகளுக்கு(சவால்களுக்கு) மத்தியில் உயர்பெரும் மருத்துவச் சேவை புரிந்தவர் மருத்துவர் து.வரதராசா. தமிழீழத் தாயக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவரானதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். போர் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பகுதியில் மக்களின் உயிர் காக்க…

செந்நெருப்புக்காரியே! – தமிழினி தமிழினி

செந்நெருப்புக்காரியே! பெருமை கொள்கிறேன்! முகத்தில் மஞ்சள் எங்கே? காலில் கொலுசெங்கே? காதில் தோடு எங்கே? நெற்றியில் பொட்டெங்கே? அழகிய புன்னகை எங்கே? கோதி முடித்த கூந்தல் எங்கே? கண்ட கனவெங்கே? பஞ்சணையில் உருண்டு படுத்த தூக்கம் எங்கே? பூப்பொன்ற கை, மரம் போன்று காய்த்ததேன்? பூக்கொய்த கையில் ஆயுதம் தரித்ததேன்? ஊரில் உன்னை அழகி என்பர் உன் வயிறும் ஒட்டிப்போனதேன்? பருவத்தில் உன் பின் ஒரு கூட்டம் உன் பருவம் சொன்னது என்ன? எனக்கென ஓர் உலகம் என்றோ! நீண்ட குதி செருப்பணிந்து பஞ்சாபிச்…