தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்

(தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware  1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2 ware என்பது பொருள் அல்லது பண்டம் என்பதைக் குறிக்கும் என்பது உண்மைதான். எனவே, ஆட்சியியலில்   warehouse –  கிடங்கு, பொருளறை, பண்டக மனை என்றும்  வேளாணியலில் பொருளைத தேக்கி அல்லது சேமித்து வைக்குமிடம் என்னும் பொருளில்  warehouse   –  தேக்ககம், கிட்டங்கி வங்கியியலில் காப்பகம், பண்டகச்சாலை  என்றும் பொறியியலிலும் மனையியலிலும்  glassware – கண்ணாடிப் பொருட்கள்  என்றும் குறிக்கின்றனர். மேசையில் வைக்கப்படும்…

தெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 1/2 : இலக்குவனார் திருவள்ளுவன்

  தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 1/2  எந்த ஒரு சொல்லுக்குமான பொருளும் அச்சொல் பயன்படும் இடத்தைப் பொருத்தே அமையும். எனவே, வெவ்வேறு பயன்பாட்டுத்தளங்களில்  அல்லது இடங்களில் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு பொருள்  அமைவதும்  இயற்கை. நமக்கு அறிமுகமான சொற்கள்  நாம் கருதக்கூடிய பொருள்களிலேயே பிற இடங்களிலும் வருவதாகத் தவறாக எண்ணும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இப்போக்கால் கலைச்சொல் பெருக்கம் தடைப்படுகிறது; அறிவியல் துறையின் வளர்ச்சியும் இடர்ப்படுகின்றது.     இங்கு நாம் ஆங்கிலத்தில்  ஆர்டுவேர் / hardware எனச் சொல்வதைத்…

உத்தமம் தலைவர் முனைவர் வாசு ரெங்கநாதன் தமிழகத்தில்

உத்தமம்(INFITT) எனச் சுருக்கமாக அழைக்கப் பெறும் உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இது குறித்து முன்னேற்பாடுகளைப் பார்க்கவும் உத்தம உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் இதன்தலைவர் முனைவர் வாசுரெங்கநாதன் தமிழ்நாடு வந்துள்ளார். புதுச்சேரிக்கும் செல்கிறார். ஆனி 07, 2045  / 21.06.14 அன்று சென்னையில் அவர் கருத்தறிவு நிகழ்ச்சி நடந்த பொழுது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள். இதில் மலேசியாவில் இருந்து – 12 ஆவது…