தமிழ்க்கருத்துகளை ஆரியமாக ஏமாற்றிய வடமொழியாளர் – பரிதிமாற்கலைஞர்

தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் ஆரியர், மொழி பெயர்த்து வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.     வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல…

பல்வகைச் சிறப்புடையது தமிழே!

பல்வகைச் சிறப்புடையது தமிழே!   உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் தொண்மை, முன்மை, எண்மை (எளிமை) ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது. தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. – சொற் பிறப்பியல் அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் : தமிழ் வரலாறு

தமிழ் வரலாறு – பாவேந்தர் பாரதிதாசன்

கேளீர் தமிழ்வர லாறு — கேட்கக் கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு (கே) நாள்எனும் நீள்உல கிற்கே — நல்ல நாகரி கத்துணை நம்தமி ழாகும் வாளுக்குக் கூர்மையைப் போல — அது வாழ்வுக்குப் பாதை வகுத்ததுமாகும் (கே) இயல்பினில் தோன்றிய தாகும் — தமிழ் இந்நாவ லத்தின்மு தன்மொழியாகும் அயலவர் கால்வைக்கு முன்பே — தமிழ் ஐந்தின்இ லக்கணம் கண்டதுமாகும் (கே) அகத்தியன் சொன்னது மில்லை — தமிழ் அகத்திய மேமுதல் நூலெனல் பொய்யாம் மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் — பிறர் மேல்வைத்த…