chera chozha pandiyar01

கேளீர் தமிழ்வர லாறு — கேட்கக்

கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு (கே)

நாள்எனும் நீள்உல கிற்கே — நல்ல

நாகரி கத்துணை நம்தமி ழாகும்

வாளுக்குக் கூர்மையைப் போல — அது

வாழ்வுக்குப் பாதை வகுத்ததுமாகும் (கே)

இயல்பினில் தோன்றிய தாகும் — தமிழ்

இந்நாவ லத்தின்மு தன்மொழியாகும்

அயலவர் கால்வைக்கு முன்பே — தமிழ்

ஐந்தின்இ லக்கணம் கண்டதுமாகும் (கே)

அகத்தியன் சொன்னது மில்லை — தமிழ்

அகத்திய மேமுதல் நூலெனல் பொய்யாம்

மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் — பிறர்

மேல்வைத்த நூலேஅகத்தியமாகும்! (கே)

நாடுதொல் காப்பிய நூலும் — இங்கு

நம்மவர் கொள்கைந வின்றிடவில்லை

ஏடுகள் தந்தன ரேனும் — தமிழ்

இயற்கைக்க ருத்தந்த நூற்களில் இல்லை (கே)

கல்லையும் செம்பையும் கண்டே — இரு

கைதொழும் கொள்கைத மிழ்க்கொள்கை இல்லை

நல்லொழுக் கம்சிறப் பென்னும் — அறம்

நாடி அதன்திறம் பாடும்த மிழ்தான்! (கே)

ஆன்மாவை ஒப்புவ தில்லை — தமிழ்

அணுவென்று கூறிடும் உயிரினை அஃதே!

கோனாட்சி தன்னைச்சி ரிக்கும் — அது

கோலெடுத் தோன்செயல் என்றுவெ றுக்கும் (கே)

(உயிரும் நுண்மையும் அணுவென லாகும்’ என்பது

பிங்கலந்தை. கோல் என்பது கொல்லுவது; முதனிலை

திரிந்த தொழிற்பெயர். அக்கோல் என்பது ஆட்சிக்கும்

கோலன் அரசனுக்கும் பெயராயினமை காண்க. )

முள்முடிக் கோனாட்சி ஒப்பும் — தமிழ்

முன்னிருந் தாள்வோனைக் காவலன் என்னும்

ஆள் என்னும் சொற்பொருள் காண்பீர் — தனி

ஆளுக்கும், ஆள்கைக்கும் வேற்றுமை இல்லை — (கே)

காட்டாறும் மக்களைக் கொல்லும் — மூங்கிற்

காடும்க னல்பட்ட ழிந்திடும், அந்தக்

கேட்டுக்குத் தெய்வமென் றேபேர் — அதைக்

கெஞ்சல்இ றைஞ்சல்த மிழ்க்கொள்கை இல்லை (கே)

(‘தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும்’ என்பது

பிங்கலந்தை )

மாசற்ற எண்ணத்தி னாலே — இன்ப

வாழ்வைஅ டைவது நந்தமிழ்க் கொள்கை

ஈசன்என் றேஒன்றைக் கூறி — இடர்

ஏற்பதை நம்தமிழ் ஏற்பதுமில்லை (கே)

( ‘மாசற்ற கொள்கை மனத்தில் உதித்தத் கால ஈசனைக்

காணும் உடம்பு’ என்பது ஒளவைக்குறள், மாசற்ற

எண்ணத்தைவிட வேறாக ஒருபொருள் உன்னை

நினைப்பார்க்கு மறுப்பாகும். )

முருகெனல் அழகிள மைக்காம் — எனில்

முருகனை நந்தமிழ் ஒப்புவ தில்லை

விரிவுறு முல்லைநி லத்தில் — வரும்

வேட்கையை மால்என்று நந்தமிழ் சொல்லும் (கே)

கோயிலும் மன்னவன் இல்லம் — அந்தக்

கோயில்வ ணங்கும்இ டந்தானுமில்லை!

தாயும் தகப்பனும் அன்றோ — தொழத்

தக்கவர் ஆவர்என் றேதமிழ் சொல்லும் ! (கே)

சாதி மதம்தமிழ் இல்லை! — அந்தச்

சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை

தீதுறு ‘தெவ்வே’ப கைமை — அந்தத்

தெவ்வில் விளைந்தது தேவர்எ னுஞ்சொல் (கே)