கருத்தரங்கு 1: இந்தியால் தமிழுக்குக் கேடு!

-சா.வி. இராசேந்திரதாசன், தேனி 1937ஆம் ஆண்டில் தமிழ்ப் பெரியார் மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் தி.ருவி.க. பசுமலை பாரதியார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின் மணம், தமிழகத்து மூலை முடுக்குகளில் உள்ளவர்களையெல்லாம் மொழியுணர்வு மிக்கவர்களாய் எழுச்சி பெறச் செய்து தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சி அளித்தது. அன்றுதொட்டு இந்திமொழி இந்நாட்டை ஆளத் தகுதியற்றது என மொழித்துறை அறிஞர் பலர் தம் கருத்துக்களைத் தெளிவுபடுத்தி வந்துள்ளனர். நாடோறும் நல்ல தமிழ் வழங்கும் நாட்டம் உடையவராய்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நண்பர் திரு. பாரதம், எம்.சி….

அன்பர் கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு!

குறள்நெறி  மாசி 18. 1995 / 01.03.1964 இதழில், ‘பாரதம்’ எம்.சி.(இ)லிங்கம் என்னும் நண்பர் இந்தி குறித்துப் பின்வருமாறு எழுதி 7 வினாக்களைத் தொடுத்து விடை கேட்டிருந்தார். நான் பிறப்பால் தமிழன்! மொழியால் தமிழன்! என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!  சுருங்கக்கூறின் என் உடல், பொருள், ஆவி தமிழ்தான்! எனினும் தேசியப்பற்று உடையவன். என் தேசம் இந்தியா! என் தலைவர் நேருசி, என் உரிமை காமராசர், என் சகோதர,  சகோதரிகள் நாற்பது கோடி மக்களும்! ஆக,…

தமிழ்ப் புலவர்கட்கு வேண்டுகோள்

 – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டில் தமிழ் இன்னும் தனக்குரிய இடத்தை அடையவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி அகன்றுவிட்டபோதும் ஆங்கில மொழியாட்சி இன்னும் அகன்றிலது. ஆங்கிலேயர் ஆண்டகாலத்தைவிட இன்று ஆங்கிலம் போற்றப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகின்றது. தமிழை இந்நாட்டின் ஆட்சிமொழி என ஒப்புக்கொண்டுள்ள போதிலும் தமிழைக் கற்றுப் புலமையடைந்தோர்களைத் தக்கவாறு பயன்படுத்தும் சூழ்நிலை இன்னும் உண்டாகவில்லை. தலைமையிடத்தில் இருப்போரெல்லாரும் ஆங்கிலப் பற்று மிகுந்தோராய்த் தமிழ்ப்பற்றும் அறிவும் குறைந்தோராய் இருப்பதனால் தமிழை எள்ளி இகழ்ந்து ஒதுக்கும் நிலையிலேயே உள்ளனர். ஆகவே இச்சூழ்நிலையில் தமிழைப் போற்றிவளர்த்து, அதற்குரிய இடத்தை அடையுமாறு…

இந்தியை எதிர்ப்போர் தென்னாட்டில் இலரா?

– தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள் வடநாடு சென்று திரும்பிவந்ததும் செய்தியாளர்களிடையே, ‘‘தென்னாட்டில் இந்தியை எதிர்ப்பார் இலர்’’ என்று கூறிவிட்டு ‘‘இந்தியை எதிர்ப்பவர்களும் அரசியல் நோக்கம் கொண்டுதான் எதிர்க்கின்றார்கள்’’ என உரைத்துள்ளதாகச் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது. இந்திமட்டும் இந்தியக் கூட்டரசின் மொழியாக ஆவதையும், அது மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதையும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் புலவர்களும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் நாளும் எதிர்த்துவருகின்றார்கள் என்பது நாடறிந்த செய்தியாகும். அங்ஙனமிருந்தும் நம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் இட்லரின் முறையைப் பின்பற்றி ‘‘இந்தியை எதிர்ப்பார் இலர்’’…

இந்தியாவின் மொழிச்சிக்கல்

–       கூடலரசன்   இந்தியத் துணைக்கண்டத்தில் நிலையான விவாதத்துக்குரிய சிறந்த பொருளாக மொழிச்சிக்கல் அமைந்துள்ளது அரசியல் வடிவம் பெற்றுள்ள மொழிஆதிக்கம் பெருநிலப் பரப்பின் கருப்பொருளாக அனைவரின் சிந்தனையையும் கவர்ந்துள்ளது. ஆட்சிப்பீடத்து ஆதிக்க மொழியாக நான்கு நூற்றாண்டுகள் இடம் பெற்றிருந்த ஆங்கிலம் அகற்றப்படுவதும், அந்தச் சிறப்பான உரிமையை இந்தி மொழிக்கு வழங்குவதும் இமயம் முதல் குமரிமுனை இறுதியாக கடுமையான கண்டனத்துக்குரியதாக அமைந்துள்ளது. இந்திக்கு மகுடம் சூட்டினாலும் ஆங்கிலத்தின் தேவையைப் புறக்கணிப்பது இயலாத செயலாக இருக்கிறது. ‘அறிவுப் பெருக்கத்திற்கு ஆங்கிலம் தேவையாகும். அனைத்திந்தியத் தொடர்பு மொழியாக ஆங்கிலமே…

சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி

 சீன வானொலி தொகுத்துள்ள “சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகள்” எனத் தமிழ், இந்தி, நேபாளம் முதலான 18  மொழி கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளது.  இதில்  குறிப்பிடத்தகுந்ததாகச் சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி விளங்குகிறது.  வீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின் முதல் சீனம்-தமிழ் கலைச்சொல்…

தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாய்க் கொள்க!

மதுரை  உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கத்தை சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் 06.01.14 அன்று நடத்தின. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம், விழா மலரை வெளியிட்டு தலைமை உரையாற்றினார். இவ்விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு பேசிய தகவல் தொழில் நுட்பத்துறை அரசுச் செயலாளர்  தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில், தமிழில் உள்ள அறநெறிகளை ஆழ்ந்தும் படிக்கவும் தமிழர் பண்பாட்டு நெறிமுறைகளை உலகிற்கு எடுத்து விளம்பச்செய்யவும் இன்றைய தலைமுறையினர் முயல…

வேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி” : ஆராய்ச்சியாளர் மூர்த்தி

பழமையான 4 வேதங்களும் “தமிழி” என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்சுகிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதரசிரீ நிறுவனரும்  தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார். மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (திச.27) நடத்தியது. இதில் வேதசிரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி  பின்வருமாறு பேசினார்: பழமையான 4 வேதங்களும் சமசுகிருதத்தில் எழுதப்படவில்லை. அவை “தமிழி’ என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சமசுகிருதம் தெரிந்த அறிஞர்களிடம்…

அயல்மொழி எதற்கடா தமிழா?

– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில் அயல்மொழி எதற்கடா? – தமிழா அயல்மொழி எதற்கடா? முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா! – அது எத்துணைச் சிறந்ததடா! வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக்   கொரு மொழியா? -வழி பாட்டுக் கொரு  மொழியா?   பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா? – தமிழா பலமொழி எதற்கடா? தமிழில் பேசு தமிழில் எழுது தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய்! தமிழில் கல்வியைக் கற்பதே…

வழி சொல்வீர்! – தங்கப்பா

  உப்பினிலே உப்பென்னும் சாரம் அற்றால்   உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை குப்பயைிலே கொட்டி அதை மிதித்துச்செல்வார்!   குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ?   தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை   தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே! உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில்.   உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே!   பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப்   பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான்! மறவுணர்ச்சி முழுதழிந்தான்;  மானங்  கெட்டான்;   வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே!   நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும்   நீறாகிப்…