தமிழ்க்கூடல், தனிப்பாடல்

மார்கழி 27, 2046 /  சனவரி 12, 2015 சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இந்த ஆண்டின் முதல் நிகழ்வுக்கு,  சென்னைக் கம்பன் கழகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். 9841181345.  

யாவும் நீ! – தாயுமானவர்

யாவும் நீ! கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்             கோவே மன்றில் கூத்தாடற் கெழுந்த சுடரே இமையவரை             என்தாய் கண்ணுக் கினியானே தொழுந்தெய் வமும்நீ; குருவும்நீ;             துணைநீ; தந்தை தாயும்நீ; அழுந்தும் பவம்நீ; நன்மையும்நீ;             ஆவி, யாக்கை நீதானே !   தாயுமானவர்: சொல்லற்கரிய: 5

தாயுமானவர் – நா.இராசா இரகுநாதன்

தாயுமானவர் தமிழீழக் கரு சுமந்து தாயுமானவர் ! உயிர் மெய் ஆயுதம் -எனத் “தமிழுக்கு ” அனைத்துமானவர்! உலகத் தமிழர்களின் ஒற்றை முதுகெலும்பு ! தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் -இவை தமிழின் பெருமிதங்கள் இனி தலைவரின் வரலாறும்!   –  நா.இராசா இரகுநாதன்

இனிதே இலக்கியம் – 6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! : தாயுமானவர்

6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே      ஆரமிர்தே என்கண்ணே அரிய வான பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப்      பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்      காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும்      விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே!   பாரதிக்கு முன்னோடியாக எளிய நடையில் பாடல் எழுதிய தாயுமானவரின் இறைச்சுவை உணர்த்தும் பாடல் இது.   தாயுமானவர் பாடல் தொகுப்பில் ஆகாரபுவனம் – சிதம்பர இரகசியம்…

இனிதே இலக்கியம் 3 விண்போல் பொதுவான கடவுள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி) 3 முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே சித்தே என் உள்ளத் தெளிவே பராபரமே. கண்ணே   கருத்தே   என்கற்பகமே கண்நிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே.    எக்கடவுளரை வணங்குவோரும் போற்றி வழிபட உதவும் தமிழ்ப்பாடல்களுள் தாயுமானவரின் இப்பாடலும் ஒன்று. தாயுமானவர் திருப்பாடலில் உள்ள ‘பராபரக்கண்ணி’ என்னும் தலைப்பில் இடம் பெற்ற பாடல் இது.   விலைமதிப்பற்ற முத்தாகவும் பவளமாகவும் பொன்னொளியாகவும் உள்ளத்தின் தெளிவாகவும் இருக்கின்ற எல்லாவற்றிலும் மேலான…

திருக்குறளும் பொது நோக்கமும் 3 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்

  (ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘ஆற்றல் அழியுமென் றந்த ணர்கனான் மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத் தெழுதா – ரேட்டெழுதி வல்லுநரும் எல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல் சோர்வின்று’’ – கோதமனார் காலஞ்சென்ற தமிழறிஞர் திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும், ‘‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்க ளுள்ளுவரோ மநுவாதி யொரு குலத்துக் கொருநீதி’’. என்று இந்நூலின் சமரசப் பான்மையை இனிது விளக்கினார். உரையாசிரியராம் பரிமேலழகரும், ‘‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லோர்க்கும் பொதுப்படக் கூறுதல் இவருக்கு…