சிறந்த குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் அடிப்படை நோக்கம். தன்னம்பிக்கைக்கும், புத்துருவாக்கத்திற்கும் வழிவகை செய்யாத கல்வி, வெற்றிடக் கல்வியாகவே கருதப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் தனிமனிதப் பொருளாதார முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கருவிதான் கல்வி என நம்பப்படுகிறது. மாணவர்களை, வேலைச்சந்தைக்கு பயிற்சி அளிப்பதே கல்வி பயிற்றுவித்தல் எனவும், இதற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களே கல்வி நிறுவனங்கள் எனவும் நம்பப்படுகிறது. பல்கலைப் பட்டங்கள், அறிவின் தேடலைவிட, அகந்தையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன. பட்டங்களை பெருமையாகக் கொண்டாடும் நாட்டில், கல்வியின் தரம் கசப்பாகக் கருதப்படுகிறது. மொழிதான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திச், சமூக…