இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 29 சொற்களை ஓரெழுத் தொருமொழி என்றும், ஈரெழுத் தொருமொழி என்றும், தொடர் மொழி என்றும் பகுத்துள்ளார். இப்பகுப்புத் தமிழியல்புக்கு ஒத்ததேயாகும். சொற்களால் திணை, பால், எண், இடம் அறியக்கூடும். ஆகவே, திணை வகையால் சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று பகுக்கப்பெற்றுள்ளன. இப் பகுப்பும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாகும். பால்வகையால் ஆண், பெண், பலர், ஒன்று, பல என ஐவகைப்படும். ஆண், பெண், பலர் என்பன உயர்திணைக்கும், ஒன்று, பல என்பன அஃறிணைக்கும் உரியன….

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி)   3/3   இங்கு நாம் குறித்துள்ள நோக்கு முதலானசொற்கள் வேறு என்னென்ன பொருட்களை உணர்த்தப் பயன்படுகின்றன என்று காணுதல் வேண்டும். இவ்வாறு காணும்பொழுது நாம் காணும் சொற்கள் தொடர்பாக வேறு சொல்லாக்கம் இருப்பின் அவற்றையும் கண்டறிய வேண்டும். இஃது ஒரு சங்கிலித்தொடர்போல் அமைய  வேண்டும். எடுத்துக்காட்டாக 90 ஆவது பக்கத்தில்  ஆய்வு என்ற  பொருளை, aspect, attention, inspection, reference, vision, sight முதலான சொற்கள் குறிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்….

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3   Department – துறை என்கிறோம். அரசு பல்வேறு துறைகளாகச் செயல்படுகின்றது. இவற்றை மேலாண்மைப்படுத்தும் செயலகத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு தேவை. ஏனெனில், செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தன்னுள் பல துறைகளை அடக்கியது. எடுத்துக்காட்டாகச் செயலகத்தில் உள்ள உள்துறையில் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை போன்ற பல துறைகள் அடங்கும். ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழிலும் இரண்டிற்கும் துறை என்ற ஒரே சொல்லையே பயன்படுத்துவது குழப்பத்தைத்தான் தருகின்றது. இரண்டிற்கும்…

தமிழ்க் கடவுள் வணக்க வழிபாட்டை ஆரியத் தொடர்பால் ஏற்பட்டதாகத் திரித்துக் கூறினர் – சி.இலக்குவனார்

  திணையைக் குறிப்பிடும் பொழுது அத்திணைக்குரிய இயற்கை வளத்தையோ உற்பத்தியான விளைபொருளையோ குறிப்பிடுவது வழக்கமாகும்; என்ற போதும் தொல்காப்பியர் பல்வேறு திணைகளுக்குரிய முதன்மையான தெய்வங்களையும் அவற்றின் முதன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் தெய்வத்தன்மை முதன்மையையும் மக்களுக்குரிய இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களை குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, முருகன், இந்திரன், வருணன் என்ற முடிவுக்கும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கடவுள் வணக்க வழிபாடுகள் ஆரியர்களுடனான தொடர்பால் ஏற்பட்டது என்ற முடிவுக்கும் கொண்டு வந்துவிட்டது. –…

சமக்கிருதத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு மிகப்பலவாம். – மு.கதிரேசன்

சமக்கிருதத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு மிகப்பலவாம்.    சமக்கிருத மொழியில் தமிழிற் போலத் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகள் இல்லை. “பவதி” என்னும் வினைமுற்று “இருக்கின்றான்” “இருக்கின்றாள்” “இருக்கின்றது” என ஓர் ஈறே நின்று எழுவாய்க்கேற்றவாறு பொருளுணர்த்தும். தமிழில் வினை முற்றுகளின் ஈறே திணை பால்களை உணர்த்தி நிற்கும. பால வகுப்புத் தமிழிற் பொருளைப் பற்றியும், வடமொழியிற் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப் பற்றி வருஞ்சொற்களெல்லாம் ஆண்பாலாகவும், பெண்மகளைப் பற்றி வருவனவெல்லாம் பெண்பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வறையறை இல்லை; மாறுபட்டு வரும், சொல்…