இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்-தொடர்ச்சி) தமிழர் வீரம் 7கடலாண்ட காவலர் சேரன் காலாட்படை தமிழ் நாட்டு மூவேந்தரும் நிலப்படையோடு கப்பற் படையும் உடையராய் இருந்தனர். சேரநாட்டை யாண்ட செங்குட்டுவன் கப்பற்படையின் வலிமையால் பகைவரை வென்று “கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்”1 என்று புகழ் பெற்றான். அவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் கலப்படையெடுத்துக் கடம்பர் என்ற கடற்பகைவரை வென்றான். கடற் கடம்பர்இப்பேரரசர் இருவரும் தமிழ் நாட்டு வாணிக வளத்தைப் பாதுகாக்கக் கருதியே கடற்போர் புரிந்தனர் என்று தோற்றுகின்றது. அவர் காலத்தில் கடல்…

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?] திருமாவளவன் விளக்கம் சரிதானே! தீவிரவாதத்திற்கும் பயங்கர வாதத்திற்குமான விளக்கத்தை முனைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதற்காக அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. நான் அரசிலறிவியலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்துள்ளேன்.அப்பொழுதிருந்தே தீவிரவாதியையும் பயங்கரவாதிகயையும் ஒன்றுபோல் கூறும் பழக்கம் தவறு என்ற கருத்து உடையவன். சில இடங்களில் இது குறித்துப் பேசியும் எழுதியும் உள்ளேன். இப்பொழுது வி.சி.க.தலைவர் இந்த விளக்கத்தைக் கூறுவது…

கண்டனப் பொதுக்கூட்டம் , சென்னை

வைகாசி 06, 2049 புதன் 20.6.2018 அன்று மாலை 5 மணி  தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, சென்னை தமிழக மக்கள் முன்னணி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைதைக் கண்டித்தும், தோழர்.பெ.மணியரசன் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும் கண்டனப் பொதுக்கூட்டம் தலைமை : தோழர்.பொழிலன் ஐயா.பழ.நெடுமாறன்,  தோழர் ்தியாகு, தோழர்.திருமாவளவன்,  தோழர்.தெகலான்பாகவி,  திருமுருகன்காந்தி,  ஒய்வு பெற்ற நீதிபதிகள்,  மூத்த வழக்குரைஞர்கள்,  மனித உரிமை ஆர்வலர்கள் அணிவகுக்கின்றனர் !  

விடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் அறுவருக்கு விருதுகள்

விடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் அறுவருக்கு விருதுகள் பினராயி விசயன், திருநாவுக்கரசர் முதலானோருக்கு விருதுகள் அறிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விட்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத்து பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை…

தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது! – திருமாவளவன்

தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது! – திருமாவளவன் கண்டன அறிக்கை  “இலங்கைப் படையினரால் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது” எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். “தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்களப் படையினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   இலங்கை இனப்படுகொலையின்பொழுது தமிழ்ப் பெண்களை இலங்கைப் படையினர் பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாகத் தென் ஆப்பிரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது. அதற்கான சான்றுகளையும் அந்த…

தமிழ்க்கொடி யேற்றம் – இரா.பி.சேதுப்பிள்ளை

தமிழன் சீர்மை தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமையமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாளாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மையால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம் பெருக்கினான்….

50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்

சீரமைப்பதற்கு ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஒரு மாத காலமாக மழை, வெள்ளத்தால். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்முதலான கடலோர மாவட்டங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச், சென்னை மாநகரம்…

பன்னாட்டு நீதிப் பொறிமுறை வேண்டும் கூட்டறிக்கை

  ஈகச் சுடர் திலீபன் நினைவு நாளில் (2015 செப்டம்பர் 26) ஒரு கூட்டறிக்கை இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக – திலீபனின் 28 ஆவது நினைவு நாளான சென்ற 26.09.2015 அன்று மாலை 6  மணியளவில்  சென்னை  தியாகராய நகரிலுள்ள செ. தெ. தெய்வநாயகம் பள்ளியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய  “வேண்டும்…