ஏறுதழுவல் அன்றும் இன்றும் – சுப.வேல்முருகன்

ஏறுதழுவல் அன்றும் இன்றும்   பழந்தமிழர் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இக்கருத்திற்கேற்ப பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது; இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும் புலப்படுத்துகிறது.   கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு வீரன் அடக்கும் செயல் ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை வலியடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை ‘ஏறுகோடல்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ஏற்றினை அடக்கும் போது அதனால் ஏற்படும் இடர்களுக்கு அஞ்சாது அதன் மீது பாய்ந்தேறி அடக்குவதினால் இச்செயல்…

கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார் – சேக்கிழார் & பரஞ்சோதி முனிவர்

முழுமுதற் கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார் மும்மைப் புலவர்களின் மிக்கதன்றே அம் மூதூர் மெய்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்குவாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார் திருவாலவாயில் எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கம் இருந்ததென்றால் – சேக்கிழார்: பெரியபுராணம் கடவுளும் சங்கத்தமிழ் ஆய்ந்தார் கண்ணுதற் பெருதற்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத தெரித்தாய்ந்த இப்பசுந்தமிழ் – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்

திறம் வாய்ந்தவை தமிழ்ச்சொற்களே!

தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக் கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித் தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்! – பரஞ்சோதிமுனிவர்: திருவிளையாடற் புராணம்

கடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ? – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57