துபாய் (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம்

துபாய் :  துபாய்   (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.   அதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி கடந்த 2 ஆம்  நாள் கல்ஃப்   முன்முறைப் பள்ளியில் நடை பெற்றது. ,,சிறுவர் சிறுமிகள் ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளையும் வாசித்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். மேலும் இங்கு தொடர்ச்சியாகப் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களில் சில பதிவிசை(கரோக்கி)யுடன் இணைந்து பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். மேலும் இந்தப் பள்ளியின் நடன ஆசிரியர்கள்  ஐதர்,  மற்றும் …

துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள்

துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள் ! துபாய் :  மதுரை மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சிற்றூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் துபாயில் பொருளூர்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய்  செபல் அலி (Jebel Ali) பகுதியில் ஏற்படுத்திய  நேர்ச்சியின்(விபத்தின்)போது கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இந்த  நேர்ச்சியை ஏற்படுத்தியதற்காக நூறாயிரம் திர்ஃகாம் மரணமடைந்தவரின் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த  நேர்ச்சியில் தொடர்புடையவருக்குக் காப்பீட்டு நிறுவனம் சில காரணங்களைக் கூறி இழப்பீடு வழங்க மறுத்து…

துபாயின் சிறப்புகள் – மாணிக்கவாசகம் பள்ளியில் உரை

தேவகோட்டை: தேவகோட்டை  பெருந்தலைவர்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துபாய் நாட்டில் புகழ்பெற்ற பள்ளி இந்தியப் பள்ளி என்று துபாய் ஈமான் பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா தகவல் தெரிவித்தார்.     இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துபாய் ஈமான்  பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா மாணவர்களுடன் துபாய் நாடு குறித்து கலந்துரையாடல்…

மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி – இராபியா குமாரன்

மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி        சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற துய்ப்பறிவும், மகிழ்ச்சியும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தின் காரணமாக விமானம் ஏறித் துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனத்தை ஆட்கொண்டிருந்தது.    அந்தக் கவலைக்கு அருமருந்தாக அமைந்தது சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி தந்த…

சிற்றிதழ் அறிமுகம் – பரணி

தரணி போற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து(நெல்லை) தமிழ்ப்போர்ப்பரணி பாடப் புத்தாண்டில் களம் புகுகிறது படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி : ந. செயபாலன், காவேரிச் சாலை, 3- ஆவது முதன்மைச் சாலை, கோடீசுவரன் நகர் – திருநெல்வேலி -627 006 பதிவு: பெரம்பலூர் கிருசு இராமதாசு, துபாய்

அமீரகத்தில் கோடை விழாக்கள்

 அமீரகத்தில் கோடை விழாக்கள்    அபுதாபி : அமீரகத்தில் கோடை விழாவினையொட்டி அபுதாபி, துபாய் முதலான பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதை காணலாம். – முதுவை இதாயத்து  

துபாயில் கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்

கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்: துபாயில் கண்ணதாசன் விழா- திருவாட்டி சுவேதா          கலைமானிற்காக ஆராரோ பாடிவிட்டு அத்தாலாட்டிலேயே கண்ணயர்ந்துவிட்ட நம் கவியரசரின் 89வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழின் சூன் மாத நிகழ்ச்சி(ஆனி 01, 2046 / சூன் 12, 2015) “காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்” என்ற தலைப்பில் கவிஞர் காவிரிமைந்தன் தலைமையில் ஒன்பான்மணிகளால் (மாணிக்கங்களால்) தொடுக்கப்பட்ட மாலையாக அமைந்தது.         முதலாவது மணி,   இளம் அகவையிலேயே கவிதைகள் புனையும் ஆற்றல் நிறைந்த செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்து- நம் தமிழன்னைக்கிட்ட…

துபாயில் பள்ளி மாணவர்கள் ஏற்பாட்டில் நோன்பு முடிப்பு

துபாயில் பள்ளி மாணவர்கள்   தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்ச்சி   துபாய் : துபாயில் பசுமைஉலகம் (‘கிரீன் குளோப்’) என்ற அமைப்பினை சார்சா பள்ளி மாணவர் உமைத்து அபுபக்கர் ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் முதலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறார்.     இவ்வமைப்பின் மூலம் 23.07.2014 புதன்கிழமை மாலை துபாய் சோனாப்பூர் ஈடிஏ சீனத்து தொழிலாளர் முகாமில் நோன்பு முடிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். முழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்வில்…

வேட்டி தீண்டாமை ஒழியட்டும்! தேசிய இனங்களின் உரிமைகள் வெல்லட்டும்!

–      இலக்குவனார் திருவள்ளுவன்     அண்மையில்(ஆனி 27, 2045 / சூலை 11, 2014 வெள்ளிக்கிழமை) இந்திய மட்டைப்பந்தாட்ட மன்றத்தின் சென்னை அமைப்பில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டு அழைப்பிதழுடன் அலுவலக ஊர்தியில் சென்றிருந்த நீதிபதி அரிபரந்தாமன், மூத்த வழக்குரைஞர் காந்தி, மதுரை வழக்குரைஞர் சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி அணிந்து சென்றதால் மன்றத்தில் நுழைந்து விழாவில் பங்கேற்க மறுக்கப்பட்டனர். தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான செயல்பாடு என அனைத்துத் தரப்பாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச் செயல் கண்டிக்கப்படுவதுடன் இத்தகைய மோசமான போக்கு நிறுத்தப்பட…