இராணி மேரிக்கல்லூரி : தேசியக் கருத்தரங்கம், ஒளிப்படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்  அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்திய செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம்,  சென்னை   [பெரிதாகக் காணப் படங்களைச் சொடுக்கவும்]    

இராணிமேரிக்கல்லூரி, மொழிபெயர்ப்புக்கருத்தரங்கம்

  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்  அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்தும் செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம்  சென்னை அறிஞர் போப் அரங்கம் பேராசிரியர் சி.இலக்குவனார்  அரங்கம் பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் அரங்கம் மாசி 13, 14, & 15, 2046 – பிப்ரவரி 25,26 & 27, 201 (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் : ச.பாலமுருகன்

 அறிமுகம்    உலகில் உள்ள தொன்மைச் சமூகங்களில் ஒன்றாகவும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் இயங்கிவரும் தமிழ் மன்பதையினர் தலைசிறந்த இலக்கியம், கலை, பண்பாட்டு, கோயில் கட்டடக்கலை, வானவியல் துறைகளில் அறிவு பெற்றவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர்களின் சிறப்பு உலகத்திற்கு தெரிவித்து நிற்பன செல்வியல் தன்மை வாய்ந்த இலக்கியங்களும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் ஆகும். ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்கள் நம் தமிழ்நாட்டில் விரவிக்கிடக்கின்றன. அவை ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நடுகற்களும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவிக்கிடக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள்…

நடுகற்கள் – இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம்

தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவுபவை நடுகற்கள். 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை முதலாவது நடுகற்கள் பற்றிய கருத்தரங்கை, சென்னையில் நடத்தியது. நாற்பதாண்டுகளில் சங்கக்கால நடுகற்கள்  முதலான மிக முதன்மையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு விரிவான ஆழமான ஆய்வுகளும் பலநிலைகளில் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை அறிய வேண்டி வருகின்ற சூன் மாதம் 21, 22 ஆகிய  நாள்களில், இக்கருத்தரங்கை, கிருட்டிணகிரி வரலாற்று ஆய்வு மையம், தருமபுரி அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம், காவேரிப்பட்டினம் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் ஆகிய வரலாற்று…

பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்

[புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 03.04.2045 – 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற எழுத்துரை] வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக்…