சுரதாவின் தேன்மழை – வேழவேந்தன்

ஆடி 12, 2046 / சூலை 28, 2015  தலை நிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள் : தீஞ்சுவை கமழும் தேன்மழை  கவிவேந்தர் கா.வேழவேந்தன் தொடர் பொழிவு 16

தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா! – இலக்குவனார் திருவள்ளுவன்

  தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள் பிறந்த  ஊர் தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘’அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன். என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலே மறைந்து விட்டார்.   சிறுகதை எழுத்தாளர் செகசிற்பியன் உவமைக்கவிஞர் பட்டத்தை இவருக்கு…