தோழர் தியாகு எழுதுகிறார் 77 :  வெண்மணி ஈகியர்க்குச் செவ்வணக்கம்!

(தோழர்தியாகுஎழுதுகிறார் 76 தொடர்ச்சி) வெண்மணி ஈகியர்க்குச் செவ்வணக்கம்! இனிய அன்பர்களே! நெருக்கடிநிலைக் காலத்தில் திருச்சிராப்பள்ளி நடுவண் சிறையில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணுகைச் சட்ட(மிசா) கைதியாகத் தோழர் இடும்பையனைச் சந்தித்தோம். சிறந்த பாடகர். கட்சி மேடைகளில் பாடிப் புகழ் பெற்றவர். தோழர் ஏசிகே அவர்களுடன் பணியாற்றியவர் என்ற முறையிலும் அவர் மீது தனி அன்பு வைத்திருந்தோம். இடும்பையன் பாடிய படல்களில் முகன்மையான ஒன்று வெண்மணி பற்றியது. அவர் பாடக் கேட்டாலே கண்ணீர் வரக் கூடிய உணர்ச்சிப் பாடல். அவரும் பாடிக் கொண்டே அழுது விடுவார். மீண்டும் மீண்டும் பாடச்…

தோழர் தியாகு எழுதுகிறார் 76 : மொழியும் மொழிவழித் தேசியமும்

தோழர் தியாகு எழுதுகிறார் 75 தொடர்ச்சி வரலாற்றில் மொழியும் மொழிவழித் தேசியமும் [வருக்கம் என்ற சொல்லுக்குப் பழகியவர்கள் கீழே நான் வகுப்பு என்று சொல்வதை வருக்கம் என்று புரிந்து கொள்ள வேண்டுகிறேன். வருக்கப் போராட்டம் என்பதையே வகுப்புப் போராட்டம் என்கிறேன்.] “தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை” என்ற தலைப்பில் இலெனின் எழுதிய நூலிலிருந்து ஒரு நீண்ட மேற்கோளை அன்பர் கதிரவன் திரைப்பிடியாக எடுத்து அனுப்பியிருந்தார். இந்த மேற்கோளின் கருத்தை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நூல் எப்பொருள் குறித்தானது? குறிப்பிட்ட மேற்கோளின் இடம்பொருள்ஏவல் என்ன? அதன்…

தோழர் தியாகு எழுதுகிறார் 28: மாவீரர்களின் பெயரால்…

(தோழர் தியாகு எழுதுகிறார் 27: தொடர்ச்சி) மாவீரர்களின் பெயரால்  ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்டுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள். 2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது.. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக…

தோழர் தியாகு எழுதுகிறார் 15: காலநிலை மாற்றம் ஊட்டி வளர்க்கும் வறுமையும் அடிமைமுறையும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்-தொடர்ச்சி) காலநிலை மாற்றம் ஊட்டி வளர்க்கும் வறுமையும் அடிமைமுறையும் காலநிலை மாற்றம் என்றால் என்ன? கோடைக் காலத்தில் வெப்பமும் குளிர் காலத்தில் குளிரும் கூடுதலாக இருக்கும் என்பதுதான் என்றால், வெப்பதட்பத்தைச் சீர்செய்ய உதவும் மின் பொறிகளின் துணைகொண்டு சமாளித்து விடலாம். பெருமழை பெய்வதுதான் என்றால் குடை அல்லது மழையங்கி கொண்டு சமாளிக்கலாம். புயல்தான் என்றால் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம். இவையெல்லாம் இடையில் வந்து போகிறவை என்றால் நிலையாகக் கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் வழக்கம்…

தோழர் தியாகு எழுதுகிறார் 5

(தோழர் தியாகு எழுதுகிறார் 4 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 5 பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும் பாலியல் சிக்கல்களில் புரட்சிக்குள்ள அக்கறைக்கு என்ன அடிப்படை? கிளாராவிடம் விளக்கிச் சொல்கிறார் மா இலெனின்: “புரட்சிக்குக் கவனக் குவிப்பு தேவை, ஆற்றல் பெருக்கம் தேவை. மக்கள் திரளிடமிருந்தும் தனியாட்களிடமிருந்தும் தேவை. டி’அனுன்சியோவின் சீரழிந்த நாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இயல்பானவை என்னும் படியான களியாட்ட நிலைமைகளைப் புரட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. பாலியல் வாழ்வில் ஒழுங்கீனம் என்பது முதலாண்மைத்துக்குரியது, அது சீரழிவின் வெளிப்பாடு.” [கேப்ரியல் டி‘அனுன்சியோ இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர்,…

தோழர் தியாகு எழுதுகிறார் 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 3 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 4 இளமையின் தேவை: துறவா? துய்ப்பு வெறியா?   இளையோரிடம் வளர்ந்து வரும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடும்,  பாலியல் விடுமை ஆர்வமும் குறித்து கிளாரா செட்கினுடன் உரையாடும் மா இலெனின் இந்தப் போக்குகளை மார்க்குசிய நோக்கில் குற்றாய்வு செய்யக் கண்டோம். ‘இலெனினுக்கு வயதாகி விட்டது, அதனால்தான் இப்படிச் சிந்திக்கிறார்’ என்று கிளாரா எண்ணி விட மாட்டார் என்பதை இலெனின் அறிந்தவரே என்றாலும் “நான் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்ல” என்று அறிவித்துக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 3

(தோழர் தியாகு எழுதுகிறார் 2 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 3 காமத்தின் உடலியலும் காதலின் குமுகியலும் சில ஆண்டுகள் முன்னதாகச் சூனியர் விகடனில் ‘காதல் படிக்கட்டுகள்’ என்ற கட்டுரைத் தொடர் வெளிவந்தது. காதலைச் சிறப்பித்தும் அவரவர் காதல் பட்டறிவைச் சொல்லியும் எழுத்தாளர்கள் / கலைஞர்கள் / பாவலர்கள் / அரசியல் தலைவர்கள் எழுதினார்கள். குமுக நோக்கில் காதல் என்பதை மனத்திற்கொண்டு நானும் எழுதியிருந்தேன். இது காதல் பற்றிய நல்லதொரு தொகுப்பு. இது பல்வேறு காதல் பார்வைகளின் பூங்கொத்து. இந்தப் பார்வைகளில் ஒன்று: காதல்…

தோழர் தியாகு எழுதுகிறார் 2

(தோழர் தியாகு எழுதுகிறார் 1 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 2 காதல் விடுமையா? பாலியல் விடுமையா? கிளாரா செட்கினுடன் பாலியல் சிக்கல்கள் குறித்து உரையாடுகிறார் மா இலெனின். இந்த உரையாடலின் போக்கில்தான் “கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு” எனும் பாலியல் விடுமைக் கொள்கை பற்றிப் பேசுகிறார். இளைஞர்கள் பலரும் தாங்கள் நம்பும் பாலியல் விடுமைப் போக்குதான் புரட்சியமானது என்று நம்புகின்றனர். இதுதான் பொதுமைத் தனமானது (கம்யூனிசுட்டுகளுக்குரியது) என்றும் புரிந்து கொள்கின்றனர். இலெனின் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. எம்மைப் போன்ற  [அல்லது நம்மைப் போன்ற?]…

தோழர் தியாகு எழுதுகிறார் 1

தோழர் தியாகு எழுதுகிறார் – முன்னுரை இனிய அன்பர்களே! தாழி மடலுக்கு நான் எந்த வரம்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த ஊடகம் இடமளிக்கும் வரை உள்ளடக்கத்தை விரிவாக்கிக் கொள்ள முடியும். தாழி மடலில் தன்வரலாறு, பிறர் வரலாறு, தன்னாட்டு வரலாறு. பன்னாட்டு வரலாறு, பொருளியல், அரசியல், மெய்யியல், கலை இலக்கியம், ஐயந்தெளித்தல், ஐயந்தெளிதல் இன்னும் என்னவெல்லாம் முடியுமோ இடம்பெறச் செய்வோம். சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள், விலங்கிற்குள் மனிதர்கள் … இவற்றின் தொடர்ச்சியாக எழுத வேண்டியவை ஏராளம். சொல்லடித்தல் என்று நான் குறிப்பிடும் புதிய…