பிரித்தானியப் பாராளுமன்றில் முதல் தடவையாகத் தைப்  பொங்கல் விழா!     தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை  அடையாளப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள், அதற்கு  முதன்மையான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றைக் காலங்காலமாக நன்றியுடன் நினைவு கூரும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன.   தம் நிலத்தையும் பரம்பரை இனத்துக்கான அடையாளங்களையும் நிலைக்க…