தலைவாசல் கல்லைப் பாதுகாக்கும் மலைவாழ்மக்கள்

  தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பவை கல்வெட்டுகளே. பண்டைய தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு இக்கல்வெட்டுகளே துணை புரிகின்றன. வரலாற்றின் பல்வேறு காலக் கட்டங்களின் நிலையைக் காட்டும் காலத்தின் கண்ணாடிகளாக இவை துணை புரிகின்றன. ஒரு வீட்டிற்கு எப்படி வாசல்படி முதன்மையோ அது போல மலைப்பகுதி ஊர்களில் தலைவாசல் கல் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மலைப் பகுதி ஊரிலும் நான்கு தலைவாசல் கல்கள் உள்ளன. ஒன்று நுழைவு வாயிலாகவும் மற்றொன்று இறப்பு போன்ற நிகழ்வுகள் நடந்தால்…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 5 : ச.பாலமுருகன்

  (ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல். கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 4 : ச.பாலமுருகன்

  (ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி)   அரசை வலியுறுத்தவேண்டியவை:   மாவட்ட வாரியான நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் பாதுகாப்பு- பேணுகை ஆகிய பணிகள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.   மாவட்ட அளவில் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரசாங்கம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்கான தமிழ்நாட்டில் மாவட்ட தோறும் அமைந்துள்ள நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் அதில் பாழடைந்து சீரழிந்து வரும் நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் தனித்தனியே தொகுத்து அதில் மேற்கொள்ளவேண்டிய பேணுகை, பாதுகாப்பு…

நடுகற்கள் – இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம்

தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவுபவை நடுகற்கள். 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை முதலாவது நடுகற்கள் பற்றிய கருத்தரங்கை, சென்னையில் நடத்தியது. நாற்பதாண்டுகளில் சங்கக்கால நடுகற்கள்  முதலான மிக முதன்மையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு விரிவான ஆழமான ஆய்வுகளும் பலநிலைகளில் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை அறிய வேண்டி வருகின்ற சூன் மாதம் 21, 22 ஆகிய  நாள்களில், இக்கருத்தரங்கை, கிருட்டிணகிரி வரலாற்று ஆய்வு மையம், தருமபுரி அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம், காவேரிப்பட்டினம் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் ஆகிய வரலாற்று…