உலகோரின் பாங்கமை பகரல் – தொல்லூர் கிழான்

உலகோரின் பாங்கமை பகரல் நாடலல் நாடல் நலத்தது கெடுவல் தேடலல் தேடல் தீயனப் பதியல் பேணலல் பேணல் பேய்மை  தழாஅல் மாணல் மதித்தல் மாய்தல் விழைதல் அறமார் மனத்தது விழைஇ மண்மிசை திறமார் வினைபுரி திறலர் ஆஅதல் ஓங்குபுகழ் நிறுத்த உலகோர் பாங்கமைந் தாங்கு  பகரு மாறே! சொற்பொருள் விளக்கம் : நாடலல் நாடல்  = நாடல் அல் > நாடுதற்குரிய நல்லனவற்றை நாடாமல் அதற்குப் புறப்பானவற்றை நாடுதலால்  நலத்தது = நலமான அனைத்தும் கெடுவல் = கெட்டுப் போகும் தேடலல்  தேடல் >…

இருமை வகைத்தே இயற்கை நெறியே! – தொல்லூர் கிழான்

இருமை வகைத்தே இயற்கை நெறியே! அல்லது வெளிக்குமால் இல்லது கருக்குமால் வல்லது மெலிக்குமால் மெல்லது வலிக்குமால் புறத்தது அகக்குமால் அகத்தது புறக்குமால் நிறுத்த வியல்நிலை திரீஇ தோன்றலும் இருத்தலும் ஒடுங்கலும் வினையல் மும்மை இருமை வகைத்தே இயற்கை நெறியே! தொல்லூர் கிழான். சொற்பொருள் : அல்லது > அல் அது = இருள் நிலை என்பது வெளிக்குமால் = தன்னிலை மாறி வெளிறி வெளிச்சமாகுமாதலால் இல்லது > இல் அது  = இல் எனும் ஒளிமையாகிய வெளிச்சம் மாறி இருண்டு கருக்குமாதலால் வல்லது >…

பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான்

பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! விரிகடல் கடந்து தண்புலம் ஒரீஇ உறுநிலம் உறைய புள்பறந்  தற்றே முதுவர் நீங்கிய ஒற்றை மகவாள் வதுவைப் பருவத்து  துடிஇடை முளையல் அரிப்படை நடுக்கிய பெரும்போ ருடற்றியான் வரிப்படை வேட்புற காந்த ளகத்து மகற்படை அன்ன மகட்படை மறவம் அகத்தே   உயிர்த்த அறநெறி தழீஇ விழுப்புண் ஏற்றனள் தெவ்வர் நூறி பழுநர் திருமடி சாய்ந்தவெம் புலியே தொல்லூர் கிழான் விரிகடல் கடந்து = எங்கும் புடைபரப்பி விரிந்திருக்கும் பெருங்கடல் கடந்து; தண்புலம் ஒரீஇ = குளிர்பொருந்திய நிலத்தை விட்டு…