தொல்காப்பியர் 2728ஆம் பிறந்த நாள் விழாவும் – பனம்பாரனார் சிலைஅமைப்பு குறித்துக் கருத்து வேண்டலும்

தொல்காப்பியர் 2728ஆம் பிறந்த நாள் விழாவும் – பனம்பாரனார் சிலைஅமைப்பு குறித்துக் கருத்து வேண்டலும்   அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காட்டில், ஆனி 26, 2047 (10.07.2016) அன்று தொல்காப்பியர் சிலையை நிறுவினோம். சித்திரை மாதச் சித்திரைக் கோள் நாள், முழுமதி நாள், தொல்காப்பியர் பிறந்த நாள் என்பர் புலவர். இந்த ஆண்டு, சித்திரை மாதச் சித்திரைக் கோள்நாளில், சித்திரை 27, 2048 (10.05.2017) புதன்கிழமை காலை 1000 மணிக்குக் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிதலுடன் நிகழ்ச்சி…

காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலை அணிவித்து வணக்கம்

காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர்  மாலை அணிவித்து வணக்கம்     தமிழ்வளர்ச்சி இயக்குநர் (பொ) – உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் நாகர்கோயிலுக்கு வந்திருந்ததை அறிந்த தமிழ்க்காப்புக்கழகத் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன் காப்பிக்காட்டில் அண்மையில் திறக்கப்பட்ட தொல்காப்பியர் சிலையை வணங்கி வருமாறு தெரிவித்தார்.   இவர் வருகையைத் தலைநகர்த்தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர்  த.சுந்தரராசனிடம் இலக்குவனார் திருவள்ளுவன்  தெரிவித்து இயக்குநரிடம் வழி விவரம் தெரிவிக்கவும் பிற  நண்பர்களுடன் வரவேற்கவும் வேண்டினார். இயக்குநரிடம் பேசியபின் புலவர் த. சுந்தரராசன், இயக்குநர் கன்னியாகுமரி…

உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும்

உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும்!   தொல்காப்பியரின் புகழ் பரவும் வகையில் உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ச.வே.சுப்பிரமணியம் பேசினார். தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்பிக்காட்டில் பிறந்தவர். அங்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தொல்காப்பியரின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சதாசிவம் மனோன்மணிபுரம் கோயில் வளாகத்தில் இவ்விழா…

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்   சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 ஞாயிறு காலை 10.00 மணி இடம் எண் 14/ டி(D) தொகுப்பு, இரண்டாவது நிழற்சாலை விரிவு, கிறித்துவத்திருக்கோயில் அருகில், (பொதுநுகர் பொருள் விற்பனைக்கடை எதிரில்) அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102 நினைவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் த.சுந்தரராசன், செயலர், அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கம் மறைமலை இலக்குவனார்,  செயலர், தமிழகப்புலவர் குழு, சென்னை 600 101

தொல்காப்பியர் சிலை உருவாக்க ஆய்வு

(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.) முதல் நான்கு  படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர்   ஆவணி 5, 2046 / ஆக.22, 2015  அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும்  தலைமுடி வழித்துச்   சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் இருக்க வேண்டும் என்று  பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே  இப்பொழுது  அமைந்துள்ளது. முடிவுறும் நிலையில் தொல்காப்பியர்…

வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!

வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்! குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர். ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான கால்கோள்விழாவில் ஆரியமொழியில் பூசை! என்ன கொடுமை இது! ஒருவேளை பூணூல் அணிவித்துத் தொல்காப்பியருக்குப் படிமம் எழுப்ப இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆரியப்பூசாரியாக இருந்தாலும்…

தொல்காப்பியர் கால்கோள் விழா – ஒளிப்படங்கள்

  குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!