(ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி) முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட வடிவமாற்ற முன்வைப்பொன்றில், ஆய்தக்குறிக்கு மாற்றாக யாருக்கேனும் விருப்பமும் கணிப்பற்றும் இருந்தால் கணியில் இருக்கும் அடைப்புக் குறியையோ விடுகுறி(caret)யையோ அலைக்குறி(tilde)யையோ போடலாம் என்று உகர ஊகாரத் துணைக்குறியீடாக அடைப்புக் குறியை அந்தக் கட்டுரையாளர் போட்டுவிட்டிருந்தது அவரின் சீர்திருத்த முன்வைப்பின் உச்சம் எனலாம். பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும் எழுத்துகளிற்குப் பல்வேறு  வேடங் கட்டிபிரித்து, நெளித்து, வெட்டி எழுதிய எழுத்து வடிவங்களைப் பார்த்தோமல்லவா? இதோ இன்னொரு போட்டியாளர் தனது எழுத்துவடிவ…