1. முல்லைமலர் என விளங்கு தமிழைக் காத்த மூவேந்தர் பரம்பரையின் முதல்வனானாய்! சொல்மலர வில்லையடா இறந்த சோகம்! சுட்டெரிக்கக் கனலானாய்! கவிதைத் தேனீ! எல்லையில்லாப் பெரும் பயணம் தொடங்கி விட்டாய் எரிமலையே தமிழ்காத்த வலிய கோட்டை கல்லுடைந்து வீழ்ந்ததுவோ? கால வேந்தன் கைகளினைப் பஞ்சணையாய் ஆக்கிக் கொண்டாய். 2. தூய தமிழ்க் கணையெடுத்துப் பகையை வென்று தூளாக்கித் தலையெடுத்தாய்; குயிலதாகி ஓயாத கவிதைத்தேன் ஊற்றி வைத்தாய் உன் மொழியால் தென்னகத்தார் நெஞ்சில் வேகம் பாய்ந்ததடா பகை முடிக்கத் திரண்ட காலை படை முதல்வா நீ…