11 ஆண்டு கடந்தும் முழுமை பெறா புதுமயில் தோட்ட வீடமைப்புத் திட்டம்

வீடுகள் எரிந்து 11 ஆண்டுகள் கடந்தும் முழுமை பெறாத  புதுமயில் (New Peacock)தோட்ட  மக்களின் வீடமைப்புத் திட்டம்  நேர்ச்சிகள்(விபத்துகள்), பேரழிவுகள், எதிர்பாராமல் நேர்பவை, இவற்றால் பாதிக்கப்பட்டு வீடுகள், உடைமைகளை இழந்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்தாலும் ஏனைய அமைப்புகளாலும் பல்வேறு உதவிகள்,  துயரீடுகள் வழங்கப்படுகின்றன.  மலையகத்திலும் பல்வேறு  பேரழிவுகள்பேரழிவு, நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனினும் தோட்ட மக்களை  துயரீட்டுப்பொருள்கள்,  உதவிகள் உரிய வகையில் சென்றடைவதில்லை.  பேரிடர்கள், நேர்ச்சிகள் ஏற்படுகின்ற  சூழல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பலதரப்பட்ட உதவிகள்,  துயரீடுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை மறுப்பதில்லை. எனினும் பாதிக்கப்பட்டவர்கள்  நிலையாக…

50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்

சீரமைப்பதற்கு ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஒரு மாத காலமாக மழை, வெள்ளத்தால். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்முதலான கடலோர மாவட்டங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச், சென்னை மாநகரம்…