அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 98-100
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 98. எது அறிவு? நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று. மன்னன் : எத்தனை பேர் இருக்கிறார்கள்? நண்பன் : நேற்றுவரை 6 பேர்களை எழுதி வைத்திருந்தேன். இன்று 7வது நபராகத் தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருக்கின்றேன். மன்னன் : [ஆச்சரியமுற்று] முட்டாள்களின் பெயர்களில் என் பெயருமா? நண்பன் :…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20 – பண்டைய பிராமணர்கள் இறைச்சி உண்ணல்- தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடுவருணங்கள் தென்னிந்தியச் சூத்திரகாரர்கள் வகுத்த வாழ்க்கைச் சட்டங்களெல்லாம், முக்கியமாக, அக்கால அளவில், தமிழ்நாட்டில் மிகச் சிலராகவும், கோதாவரியப் பள்ளத் தாக்கின் தலைப்பில், மிகப் பலராகவும் வாழ்ந்திருந்த பிராமணர்களைக் குறித்தனவே, அச்சூத்திரங்கள், நான்கு பெருஞ்சாதிகளையும், எண்ணற்ற கலப்புச் சாதிகளையும் குறித்துப் பேசுகின்றன என்றாலும், அவை கூறும் சட்டங்களில், ஏனையோரிலும், பிராமணர் குறித்தே , அவை தாமும் அக்கறை கொண்டுள்ளன ஆதலின் அவை கூறும் அச்சாதிக் கூறுபாடுகள், வெறும் தத்துவ…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 95-97
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 92-94 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 95. மறதி! ஒரு பெரியவர் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லாரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார். இவர் தன் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை சரிபார்ப்பவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து, “பெரியவர் பயணச்சீட்டைக் கட்டாயம் வாங்கியிருப்பார். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றெண்ணி “பெரியவரே, பரவாயில்லை; நீங்கள்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20: புலவர் கா.கோவிந்தன் – பண்டையபிராமணர்கள்இறைச்சிஉண்ணல்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 19 : வட இந்தியாவும்தென் இந்தியாவும் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு ‘’பௌதாயன தரும சூத்திரங்கள் (Sacred Text Book of the East. : பகுதி 14) என்ற தம்முடைய மொழி பெயர்ப்பு நூலில், திருவாளர் பூலர் (Buhler) அவர்கள், அண்ணன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் போலும் உடன் பிறந்தார் இருவரின் மக்களுக்கு இடையிலான திருமணமாக, ‘’மாவல பித்(து)ர்ஃச் வரர் துஃகித், கமனம்” என்ற திருமணத்தைத் தவறான நிலையில் பொருள் கொண்டுள்ளார். இவைபோலும் திருமணங்கள், தென்னிந்தியாவில் முறையானவையே ஆகும்….
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 92-94
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 89-91 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 92. நண்பனின் ஆலோசனை ஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். அதில் ஒரு பெண் அழகு. படிப்பு சிறிது உண்டு. நல்ல குணம் உள்ள பெண். ஆனால் பரம ஏழை. “மற்றொரு பெண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அக்குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாததால் அவ்வளவு சொத்தும் அந்தப் பெண்ணுக்குத் தான் சேரும். ஆனால் அழகு…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 19 : வட இந்தியாவும்தென் இந்தியாவும் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 18 : ஆகமங்களின் மூலம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 6. வட இந்தியாவும் தென் இந்தியாவும் (கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை ) ஆபத்தம்பரும் பௌத்தாயனரும் சூத்திரகாரர்களில் (உரையாசிரியர்களில்) பெரும்பாலும், கடைசி சூத்திரகாரராகிய ஆபசுதம்பர், கோதாவரி ஆற்றின் மேலைப் பள்ளத்தாக்கில் வாழ்ந்து, கற்பித்து வந்தார். யசுர் வேத தாட்சினாத்ய பிராமணர்களுக்கு வாழ்க்கை முறைகளை வகுத்து அளித்தார். திருவாளர் பூலர் அவர்களின் கூற்றுப்படி, அவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர்க் கொண்டு போகப்படுவாரல்லர். (Sacred Text…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 89-91
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 89. சிந்தனை செல்லும் வழி சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் – ‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்கணமும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், மறவாதே வழுத்தியறியேன் கனவினிலும். எனக்கு உன் அருள் எப்படி கிடைக்கும்?’ என்று. ஆனால் பலர் இன்று. சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்குவழியிலேயே சிந்தின்கின்றனர். அத்தகைய…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 18 : ஆகமங்களின் மூலம் – புலவர் கா.கோவிந்தன்
(வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு ஆகமங்களின் மூலம் ஆகமப் பயிற்சிகள் எங்கிருந்து தோன்றின என்ற இரண்டாவது வினாவிற்கு விடை காண்பது சிறிது அதிக அருமையுடைத்து. ஆகம வழிபாட்டு முறைகள் முழுக்க முழுக்கத் தீ வழிபாடற்றது ஆதலாலும், வழிபாட்டைத் தொடர்ந்த வேதம் ஓதல் வேண்டப்படாதது ஆதலாலும், அவை, தசுயூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தசுயூ வழிபாட்டு முறையிலிருந்தே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும். தசுயூ வழிபாட்டுமுறை, வடக்கு தெற்கு உள்ளிட்ட இந்தியப் பெரு நிலப்பரப்பு…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 87 : நிலவுக் காட்சி-தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலி புகழ்ந்து வேண்டல் `அன்னைஎன் மொழியுள் அமைந்தநல் லிசையும் தொன்மை மொழியுள் தோன்றிசை சிலவும் ஒல்லும் வகையான் உணர்ந்துளேன் ஆயினும் உள்ளமும் உணர்வும் உருகிட இன்ப வெள்ளம் பாயும் வியனிசை இதுபோல் 225 இந்நாள் எல்லை யாண்டும் கேட்டிலேன்; என்நா சிறிதால் எவ்வணம் புகழ்வேன்? இதன்றிறம் சிறிதெனக் கியம்புதி கொல்லோ? பதமிது வன்றேல் பைந்தொடி பொறுத்தருள்’ எனநான் பணிவுடன் இயம்பினே னாக, 230 அனநடை…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 86-88
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 83-85 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 86. எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டா ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில் ஒரு பெண்ணைக் காதலித்தான். பலத்த எதிர்ப்புக்கிடையே அவளைத் திருமணமும் செய்துகொண்டு, பெற்றோருடனேயே நல்ல முறையில் குடும்பம் நடத்திவந்தான். அந்தச் சமயத்தில் ஒருநாள், அத் தாசிப் பேண்ணின் பழைய காதலன் அவளிருப்பிடத்தை எப்படியோ கேள்விப்பட்டு அறிந்து யாருமில்லா நேரம் பார்த்து அவள் வீட்டிற்கு…
க0. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-வி.பொ.பழனிவேலனார்
(௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா? க. தமிழ் மொழியுடன் வேற்றுமொழிச் சொற்கள் பெருமளவு கலக்கப்பட்டு பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவிட்டன. உ. தமிழ்மக்கள் பேச்சிலும், எழுத்திலும் தமிழ்ச்சொற்களைக் காண்பது அரிதாகிவிட்டது.௩. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை.௪. தமிழ்நாட்டில் உள்ள கடைகள், தொழிலகங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் எழுதப்படவில்லை.ரு. தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் பல தமிழல்ல. தமிழில் எழுதியுள்ள பெயர்களும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் வழங்கவில்லை.எ. தமிழில் இப்பொழுது இந்திச் சொற்கள்…
வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 17 : . வேதாந்தம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி பண்டை நாட்களில், வைதீக நெறியாளர்களுக்கும், ஆகம நெறியாளர்க்கும், இடையில் பெரும்பகை – கடும்பகை நிலவி இருந்தது. ஆகம நெறியாளர்கள், கடவுள் பெயரால் இரத்தம் சிந்தப்படுவதை வெளிப்படையாகவே கண்டித்தனர். இறைச்சி உண்பதை, அதிலும் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்தனர். இரத்தம் சிந்தும் யாகங்கள் குறித்த அவர் கண்டனங்களின் எதிரொலி , மகாபாரதத்தில் கேட்டது. வைதீக ஆகம நெறிகளின் ஒருங்கிணைந்த அவ்விரு நெறிகளிலும்…
