ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 23 : மது விலக்குப் பரப்புரை

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 22 :நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2) தொடர்ச்சி) என் சுயசரிதை 17. மது விலக்குப் பிரசாரம் செய்தது எனது நாடக மேடை நினைவுகள் என்னும் புத்தகத்தில் 1895-ஆம் வருடம் நான் பெங்களுருக்குப் போயிருந்தபோது ஒருமுறை அரை அவுன்சு பிராந்தி சாப்பிட்டு அதனால் பெருந்துன்பம் அநுபவித்த விசயத்தை எழுதியிருக்கிறேன். பட்ட ணம் திரும்பி வந்தவுடன் மதுவிலக்குச் சங்கம் ஒன்றைச் சேர வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆயினும் நானாகக் காசு சம்பாதித்தாலொழிய எந்தச் சங்கத்தையும் சேரக்கூடாதெனத் தீர்மானித்தவனாய் 1898-ஆம் வருடம் நான்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 61 : எனக்குக் கிடைத்த பரிசு

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை – தொடர்ச்சி) என் சரித்திரம் 37. எனக்குக் கிடைத்த பரிசு பல வித்துவான்கள் நிறைந்த கூட்டத்தில் இருந்து பழகாத எனக்குத் திருவாவடுதுறைச் சத்திரத்தில் வித்துவான்கள் கூடிப் பேசி வந்த வார்த்தைகளும் இடையிடையே பல நூல்களிலிருந்து சுலோகங்களைச் சொல்லிச் செய்த வியாக்கியானமும் ஆனந்தத்தை விளைவித்தன. சங்கீத வித்துவான்கள் என்னைப் பாராட்டியபொழுது, “சங்கீத அப்பியாசத்தை நாம் விட்டது பிழை” என்று கூட எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் நெடுநேரம் நிற்கவில்லை. இவ்வாறு பேசிக்கொண்டும் வித்துவான்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டுமிருந்தபோது…

ஊரும் பேரும் 56 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இதிகாசமும் ஊர்ப் பெயரும்

(ஊரும் பேரும் 55 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – திருவாக்கும் ஊர்ப் பெயரும் – தொடர்ச்சி) இதிகாசமும் ஊர்ப் பெயரும் பாரதமும் இராமாயணமும் திருவேட்களம் ஐவர் மலை லாடபுரம்இன்றும், லாடபுரம் என்னும் ஊரைக் குறித்து ஒரு கதை வழங்குகின்றது. அவ்வூரின் ஆதிப் பெயர் விராடபுரம் என்றும், பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்தபோது அவரை ஆதரித்த விராட மன்னனுக்குரியது அவ்வூர் என்றும் கருதப்படுகின்றன. அங்குள்ள இடிந்த கோட்டையை அவன் அரண்மனையெனக் காட்டுகின்றார்கள். அப் பகுதியில் ஆடு, மேய்க்கும் இடையர்கள் இன்றும் அருச்சுனன் வில்லைச் சில வேளைகளில் காண்பதாகச்…

தமிழ் வளர்த்த நகரங்கள் 14 – அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்கோவில் பெருமை

(தமிழ் வளர்த்த நகரங்கள் 13 – அ. க. நவநீத கிருட்டிணன்: வேய்முத்தர்- தொடர்ச்சி) நெல்லைத் திருக்கோவில் பெருமை பன்னூறு ஆண்டுகட்கு முன்னரேயே இறைவன் திருக்கோவிலைக் கற்றளியாக அமைத்துக் காணும் அரிய பண்பு நம் நாட்டு மன்னர்பால் வேரூன்றி விளங்கிற்று. என்றும் அழியாது நின்று நிலவும் ஈசனுக்கு என்றும் அழியாது நின்றிலங்கும் கற்கோவிலை அமைத்து வழிபட்டனர் முன்னைய மன்னர்கள். அம் முறையில் பாண்டிய மன்னரால் அமைக்கப்பெற்ற அரிய கோவிலே திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலியில் திகழும் நெல்லையப்பர் திருக்கோவில். ‘நித்தம் திருநாளாம் நெல்லையப்பர் தேரோடும்’ என்று…

பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன்

(பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல் – தொடர்ச்சி) பூங்கொடி கொழுநன் ஆவேன் கொழுகொம் பின்றிப் பூங்கொடி தவித்து விழுவது பொறேனாய்க் கொழுநன் ஆவேன் எனுமுயர் நினைவால் இரங்கி வந்துளேன்    90 நின்பூங் கொடியோ நேரிசைக் குலத்தாள் என்பெரு நிலையினை இசைத்தால் உடன்படும்; உடன்படச் செய்க குறளகம் விடுத்துக் குமரன் என்னைப் பெறுமணங் கொள்ளப் பெட்டனள் ஆயின் அளப்பருஞ் செல்வம் அனேக்தும் ஈவேன்     95 களைத்துடல் இளைக்கக் கருதா தென்றன் காதற் கடலைக் கடந்திட அவளை மாலுமி யாக்கி மகிழ்ந்திடக் குறித்தேன்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 916. Assignment Card – குறிப்புத்தாள் அட்டை 917. Assignment Chart – குறிப்பு விளக்க அட்டை பாடசாலை வேலை யாவற்றையும் தனிப்பயிற்சி மூலம் நடத்த முடியாது. போனாலும், வேலையின் பெரும் பாகத்தை இம்முறையின்…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 22 : நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2)

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. நாடகக் கலை … சிறுதொண்டுகள் (1) தொடர்ச்சி) என் சுய சரிதை நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2) 13–3–49 விக்குடோரியா பொது அரங்கில் (Public Hall) இன்று ‘தோட்டக்காரன்’ எனும் ஓர் சமூக நாடகத்தில் செட்டியாராக நடித்தேன். நடித்தது எனக்கு மன நிறைவாக இருந்தது. விக்குடோரியா பொது அரங்கில் இதற்கு முன்பாக 10 வருடங்களுக்கு முன் நடித்தது. 24-4-49, அன்று விக்குடோரியா பொது அரங்கில் சுகுண விலாச சபையார் எனது நாடகமாகிய ‘சந்திரஃகரி’யை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 59 : 35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் – தொடர்ச்சி) என் சரித்திரம் 36. எல்லாம் புதுமை நான் சுப்பிரமணிய தேசிகரது தோற்றத்திலும் பேச்சிலும் ஈடுபட்டு இன்பமயமான எண்ணங்களில் ஒன்றியிருந்தபோது தேசிகர் என்னை நோக்கி அன்புடன், “இப்படி முன்னே வாரும்” என்று அழைத்தார். நான் அச்சத்துடன் சிறிது முன்னே நகர்ந்தேன். “சந்நிதானம் உம்மைப் பரீடசை செய்யவும் கூடும்” என்று ஆசிரியர் மாயூரத்திலிருந்து புறப்படும்போது சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. “சிறந்த அறிவாளியும் உபகாரியும் எல்லா வகையிலும் பெருமதிப்புடையவருமாகிய சுப்பிரமணிய தேசிகர் நம்மைப்…

ஊரும் பேரும் 55 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – திருவாக்கும் ஊர்ப் பெயரும்

(ஊரும் பேரும் 54 : இறையவரும் உறைவிடமும் – தொடர்ச்சி) திருவாக்கும் ஊர்ப் பெயரும் தேவாரம் பாடிய மூவருக்கும் சைவ உலகத்தில் அளவிறந்த பெருமையுண்டு. அவர்கள் திருவாக்குப் பொன் வாக்காகப் போற்றப்படும். இத்தகையசீர்மையைச் சில ஊர்ப் பெயர்களால் உணரலாகும். அழகார் திருப்புத்தூர் பதிகள் பலவுண்டு. அவற்றுள் வேற்றுமை தெரிதற் பொருட்டு ஒருபுத்தூரைத் திருப்புத்தூர் என்றும், மற்றொரு புத்தூரைக் கடுவாய்க்கரைப்புத்தூர் என்றும், பிறிதொரு புத்தூரை அரிசிற்கரைப் புத்தூர் என்றும்தேவாரம் குறிப்பதாயிற்று. அவற்றுள் அரிசிற்கரைப் புத்தூர், அரிசில்ஆற்றங்கரையில் அமைந்ததாகும்.1 கண்ணுக்கினிய செழுஞ் சோலையின்நடுவே நின்ற அவ்வூரை அழகார்…

தமிழ் வளர்த்த நகரங்கள் 13 – அ. க. நவநீத கிருட்டிணன்: வேய்முத்தர்

(தமிழ் வளர்த்த நகரங்கள் 12. – அ. க. நவநீத கிருட்டிணன்: திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி – தொடர்ச்சி) புராணம் புகழும் நெல்லை வேணுவனத்தில் வேய்முத்தர் திருநெல்வேலியின் தெய்வ மாண்பை விளக்கும் புராணங்கள் இரண்டு. அவை திருநெல்வேலித் தல புராணம், வேணுவன புராணம் என்பன. இப் புராணங்களால் பண்டை நாளில் இந் நகரப் பகுதிகள் பெரியதொரு மூங்கிற் காடாக இருந்தது என்று தெரிய வருகிறது. அதனாலயே நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயரும் வழங்கி வருகிறது. இப் பெருமான் மூங்கிலின் அடியில் முத்தாக முளைத் தெழுந்த…

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. 6. – வ.உ.சிதம்பரனார்

(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 5. உயிர்த்தொண்டு – தொடர்ச்சி) தமிழ்க்கலை 6. வ. உ. சிதம்பரனார் [9-11-47 ஞாயிறன்று சென்னை செயின்ட்மேரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கழக மகாநாட்டில் தோழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.) நான் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள் படத்தைத் திறப்பேன் என்றார் தலைவர். இத்தனிப்பேற்றினை வழங்கிய கழகத்தாருக்கும் உங்களுக்கும் என் நன்றி உரியதாகுக. நான் இங்கு எக்கட்சியின் சார்பிலும் வரவில்லை, நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. சிலர் நினைக்கிறார்கள்,…

பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல்

(பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் ஆவல் மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல் தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்; ‘ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத் தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன் ஆவேன் யான்’ என ஆவல் துரப்பக் காவிற் புகுந்துள பாவையைக் காண்பான் வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்; பூங்கொடி வெருவுதல் புகுவோன் றன்னைப் பூங்கொடி நோக்கி ‘இகுளை! இம்மகன் என்மேற் காதல்      60 மிகுமனத் தானென மேலொரு நாளில் தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன்…