வெருளி நோய்கள் 146 -150 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 141 -145 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 146 -150 146. அஞ்சல் முத்திரை வெருளி – Grammatosimophobia அஞ்சல் முத்திரை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அஞ்சல் முத்திரை வெருளி. பொதுவாக அஞ்சலகங்களில் பணியாற்றுவோருக்கே அஞ்சல் முத்திரை வெருளி வருகிறது. அஞ்சல் முத்திரை இடுவதற்குப் போதுமான மை பயன்படுத்தப் பட்டதா? அஞ்சல் முத்திரை தெளிவாக விழுந்திருக்குமா? அஞ்சல் முத்திரை மையால் ஒவ்வாமை ஏற்படுமா என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அச்சமும் கொள்வர். 00 147. அஞ்சல் வெருளி – Postalphobia அஞ்சல் தொடர்பான…
வெருளி நோய்கள் 141 -145 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 136 -140 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 141 -145 141. அச்சச்சூழல் வெருளி-Counterphobia அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி. இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான். counter என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எதிராக. 00 142. அச்சப்ப வெருளி – Zymarikaphobia அச்சப்பம் (pasta)பற்றிய அளவற்ற பேரச்சம் அச்சப்ப வெருளி. pasta என்பதற்கு இலத்தீனில் மாவு, மாவு உணவு என்னும் பொருள்கள். கிரேக்கத்தில் வாற்கோதுமைக் கஞ்சி என்னும் பொருள். இத்தாலிய உணவுவகையான…
131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – இலக்குவனார்திருவள்ளுவன்
(130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் “இராமாயணக்கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தசுயூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.” இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய `திராவிடரும் ஆரியரும்’ என்னும் புத்தகத்தின் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது. “இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும், படை வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை -ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.” இது (உ)ரோமேசு சந்திர டட்டு…
வெருளி நோய்கள் 136 -140 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 131 -135 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 136 -140 136. அகற்றல் வெருளி – Disposophobia தனிப்பட்ட உடைமைகள் அகற்றப்படுதல் அல்லது காணாமல் போதல் தொடர்பாக ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அகற்றல் வெருளி. முதலில் இதை இன்மை வெருளி எனக் குறிப்பிட்டேன். ஆனால், இன்மை வெருளி(nihilophobia / Tipotaphobia/Nullophobia) எனத் தனியாக உள்ளதாலும் இல்லாமையைக் குறிக்கும் இன்மை வெருளியாகக் கூறாமல் இருந்த பின் இல்லாது போதலைக் குறிப்பதால் தனியாகக் குறிக்க வேண்டும் என்பதாலும் இப்பொழுது அகற்றல் வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது. dispos…
வெருளி நோய்கள் 131 -135 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 126 -130 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 131 -135 131. அகவை 60 வெருளி – Sexatannophobia அகவை 60 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 60 வெருளி. 50 அகவையாளருக்கு ஏற்படும் பேரச்சம் மேலும் பெருகும். ஒரு புறம் மணிவிழா குறித்த மகிழ்ச்சியும் உள்ளுக்குள் பொறுப்புகள் தொடர்பான கவலையும் கலந்த அகவை இது. பணி ஓய்வு முடிந்த பின்னரும் வீட்டு நிலையை உயர்த்த முடியவில்லை, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்விக்க முடியவில்லை, சொந்த வீடுவாங்கிக் குடி போக முடியவில்லை, இரத்த…
வெருளி நோய்கள் 121 -125 : இலக்குவனார் திருவள்ளுவன்
122.) ஃபிரெடி கெரூகெர் வெருளி – Nightmare ElmStreetphobiaகற்பனைப்பாத்திரமான ஃபிரெடி கெரூகெர்(Freddy Krueger) குறித்த அளவு கடந்த பேரச்சம் ஃபிரெடி கெரூகெர் வெருளி.எல்லம் தெருவில் அமுக்கிப் பிசாசு(A Nightmare on Elm Street) என்னும் படத் தொடரில் வரும் கற்பனைப்பாத்திர கொலைகாரனே ஃபிரெடி கெரூகெர்.00 123.) ஃபெரன் வாற்றர் வெருளி – Fernwaltersphobiaபுனைவுரு ஃபெரன் வாற்றர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஃபெரன் வாற்றர் வெருளி.ஆர்தர் படக்கதைகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் வரும் ஒரு பாத்திரமே ஃபெரன் வாற்றர். இது மனித உருவேற்றப்பட்ட (anthropomorphic dog) நாய்;…
வெருளி நோய்கள் 116 -120 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 106-110 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 116 -120 116.) 911 ஆம் எண் வெருளி – Enniakosioihendecaphobia911 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 911 ஆம் எண் வெருளி.911 என்பதன் இறுதிக் கூட்டுத்தொகை 9+1+1= 11; 1+1= 2 என்பதால் எண் இரண்டின் மீது பேரச்சம் கொள்வோரும் எண் 9, எண் 1 ஆகிய இரண்டு எண்கள் வருவதால் இவ்விரண்டு எண்கள் மீது பேரச்சம் கொள்வோரும் 911 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00117.) 99 ஆம் எண் வெருளி –…
வெருளி நோய்கள் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 101-105 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 106-110 106.) 700 ஆம் எண் வெருளி- Septicentumphobia700 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 700 ஆம் எண் வெருளி.எண் 700 இல் உள்ள 7 + 0 + 0 எண்களின் கூட்டுத்தொகை 7. எனவே, எண் 7 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 70 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.00107.) 71 ஆம் எண் வெருளி – Hebdomekontahenophobia71 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 71 ஆம்…
க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார்
(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?) ஆ. தமிழர்க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் பண்டைத் தமிழர் அறிவியலறிவு படைத்தவராக இருந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் இலைமறைகாய் போலப் பரவலாகக் காணலாம். ஏன்? சில சொற்கள் கூட அறிவியல் கருத்துகள் பொதிந்தனவாக உள்ளனவென்பது நுணுகிக் காண்பார்க்குப் புலனாகும். தமிழ்ச்சொற்கள் யாவும் பொருள் குறித்தனவே என்பதை ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது. காட்டாக, ஞாலம், ஞாயிறு, உலகம் என்னும் சொற்களைக் காண்போம். ஞாலம் என்றால் அசைதல் என்றும், ஞாயிறு என்றால் பொருந்தியிருப்பது என்றும்,…
122./133 தி.மு.க. தோழமைத் தலைவர்கள் சனாதனத்திற்கு எதிராகப் பேசி வருகிறார்களே! ++ 123. நிறைவான செய்தி என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
(121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லையே – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 122-123 123. நிறைவான செய்தி என்ன? பக்தியின் பெயரால் ஞானம் என்ற பெயரால் யோகம் என்ற பெயரால் தத்துவம் என்ற பெயரால் ஆன்மீகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னித் திரும்பத்திரும்பக் கூறுவதெல்லாம் நான்கு வருணப்பாகுபாடுதான் என்கிறார் நாரா நாச்சியப்பன்(கீதை காட்டும் பாதை, பக். 118). சிறந்தன என்றும் நல்லன என்றும் கூறப்படும் நூல்களில் இருந்தாலும் பொய்யாகக் கூறப்படும் தகவல்களை நம்பக்கூடாது. உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள்…
121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லை. அப்படியானால் திமுகவிலேயே இதற்கு ஆதரவு இல்லைதானே!
(சனாதனம் பொய்யும் மெய்யும் 120 தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 121 “சனாதனம் என்றால் 4% மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-இல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லாரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம். என்று பேசியுள்ளார். மேலும், 1912-இல் பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர்…
119/133. சனாதனம் இல்லறத்தைப் போற்றுவது என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 தொடர்ச்சி) ஆரியர்களின் குடும்ப வாழ்க்கை என்பது யாருடனும் யாரும் உறவு கொள்ளலாம் என்பதே. தமிழர்களின் குடும்ப வாழ்க்கையோ இல்லறம் என அறமாகக் கூறப்படுகிறது. மனைவியை இழிவு படுத்துவது சனாதனம். மனைவியின் சிறப்புகளைப் போற்றவதே தமிழர் நெறி. இது குறித்துத் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார், “இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்” என்கிறார். “மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத…
