[“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 தொடர்ச்சி] “மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 3/3     நேரு, அம்பேத்கர், இந்து மகாஅவையினர்(சபையினர்), இடஞ்சாரிகள் அனைவருமே வலுவான இந்தியா,வல்லரசு இந்தியா என்ற முழக்கத்தில் ஒரே குரலில் பேசுகின்றனர். இதன்வழியாக அதிகாரக் குவிப்பதற்கு துணையாகவோ, மவுன சாட்சியாகவோ நிற்கின்றனர்.    இப்போது, மாட்டுக்கறிச் சிக்கலை முன்வைத்து தனி மனிதரின் உணவுப் பழக்கத்தையும் இந்துத்துவ வெறியர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற ஞாயமான எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், இதற்கான அடிப்படை “மதச்சார்பற்ற” இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே உள்ளது.   அரசமைப்புச் சட்டத்தின் கூறு 48, பசுவிற்குத் தனித்தப் பாதுகாப்பு வழங்குகிறது. “மாநிலங்கள் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும்…