திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது.   திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது.   இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள்  தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான்.  முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது…

அறம் செய விரும்பு! – ஞா.மணிமேகலை

அறம் செய விரும்பு! வாகை சூடி வரவேற்று, வந்த விருந்தினர் மகிழ வகை செய்து பணிவுடன் அன்பும் காட்டுந் திறம் பருமிய நாட்டுப் பண்பாட்(டு) அறம்! ஒப்பிலா ஒண்தமிழ் ஓதுதல் அறம் ஒரு நிலையில்லா மனத்தை ஆளுதல் அறம் கொல்லா நெறியும் வாய்மையும் அறம் கோபம் வென்ற சாந்தம் அறம்! தன்னல மில்லாத் தியாகம் அறம் தாய், தந்தையரைப் பேணுதல் அறம் பிறன் மனை நோக்காப் பேராண்மை அறம். பேதம் இல்லா சமுதாயமே அறம்! அறத்தின் பயனே அட்சயப் பாத்திரம் அறத்தின் சிறப்பே அன்ன…

ஊக்கமது கைவிடேல்! – பா.உலோகநாதன்

ஊக்கமது கைவிடேல்! எல்லைகள் வேண்டா! உன்மன வெளியில் நிற்பாய் நடப்பாய் சிறகுகள் விரிப்பாய்! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! எதுவரை முடியும் அதுவரை ஓடு அதையும் கடந்து சில அடி தாண்டு! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! இலக்குகள் நிருணயி பாதைகள் வடிவமை தடைகளைத் தகர்த்தெறி பயணங்கள் தொடங்கு! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! காரிருள் என்பது கருக்கல் வரைக்கும் விடியலில் ஒளியின் கதவுகள் திறக்கும் ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! காலங்கள் மாறும் வருடங்கள் ஓடும் – உன் கனவுகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!…

ஆரா: பருமாவில் பரிதாப நிலையில் தமிழ்- இலக்குவனார் திருவள்ளுவன் ஆதங்கம்: ‘தமிழக அரசியல்’

  பர்மாவில் பரிதாப நிலையில் தமிழ் – பயணம் செய்த தமிழறிஞரின் ஆதங்கம்     பருமாவில்  தமிழ்க்கல்வி வளர்ச்சி மையமும் சந்திரசேகரரின் நந்தவனம் நிறுவனமும் இணைந்து கடந்த மாதம் இலக்கியப் பெருவிழாவை நடத்தின. அதில் சிறப்புரையாற்றச் சென்று சென்னை திரும்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன்.   அவரிடம் பருமாவில் தமிழன், தமிழின் நிலை என்ன என்று கேட்டோம். நம்மிடம் பருமா பற்றி விரிவான தகவல்களைப் பகிர்ந்து  கொண்டார் இலக்குவனார் திருவள்ளுவன்.   பர்மா( பருமா) என்று அழைக்கப்பட்ட நாட்டின் இப்போதைய பெயர்…

அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்!     நண்பர்  நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால்,  இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.   தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும்  ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 2/2 – சொருணபாரதி

(புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2  தொடர்ச்சி) புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம்  2/2   அத்துடன், தான் பார்த்த ஆலயங்கள், சுற்றுலாத் தளங்கள், புத்த மடாலயங்கள் ஆகியவற்றையும் விவரிக்கிறார். பசுமந்தான் அருள்மிகு வரதராசப் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார்.  அது மட்டுமில்லாமல், அந்தக் கோவிலை வழங்கிய திருவரங்கம்இராசா இராமநாத(ரெட்டியா)ர்பற்றிய குறிப்பையும் தருவதோடு, அவர்தம் கொள்ளுப்பேரன் வாசுவைச் சந்தித்ததையும் குறிப்பிடுகிறார். அதோடு மட்டுமின்றி, கோவிலில் தட்டில் போடப்படும் காசைக் கூட அருட்சுனைஞர் (அர்ச்சகர்) எடுத்து உண்டியலில் போட்டு விடுவதைப் பற்றியும்,  கவனிப்புடன் சொல்கிறார். கம்பையில் ஒரு…

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2 – சொருணபாரதி

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2   நெருப்புக் கோளமான கதிரவனிலிருந்து உடைந்த துண்டின் பயணம் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமியாக உருவெடுத்தது. பூமிப்பந்தின் பல நூறாயிரம்(இலட்சம்) ஆண்டுகளின் பயணம் உயிர்களை உருவாக்கியது. உயிர்களின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பயணம் மனிதனை உருவாக்கியது. மனிதனின் வாழ்க்கையும் ஒரு பயணம்தான்!   பயணம் பட்டறிவுப் புதையலைக் கண்டெடுக்கும் அகழாய்வு; அறிவைச் சுரக்கும் பள்ளதாக்கு. பயணம் மனிதர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பயணங்கள் பல கண்டங்களைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் நாடுகளைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் புதிய…

இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்

  மரித்துப்போனதா மானுடம் ? சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ! ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ? தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள்…