கருமலைத்தமிழாழனின் செப்பேடு – நூலாய்வு : பொன்.குமார், இனிய உதயம்

  செப்பேடு ( மரபுக் கவிதை நூல் ) ஆசிரியர் – பாவலர்  கருமலைத்தமிழாழன் திறனாய்வு – பொன் குமார்        தமிழ்க் கவிதையின்  தொடக்கம்   மரபுக்  கவிதையே.  பத்தொன்பதாம்  நூற்றாண்டு  வரை  மரபின்  ஆதிக்கம் தொடர்ந்தது.  பாரதிக்குப்  பின்  மாற்றம்  ஏற்பட்டது.  மரபைப்  பின்  தள்ளி  புதுக்கவிதை  முன்  சென்றது.  மரபுக்  கவிதை  என்றாலே  ஒரு  சிலர்  மட்டுமே  எழுதி ஒரு சிலர்  மட்டுமே  வாசிக்கும்  நிலையில்  மரபுக்  கவிதை  இருந்ததை  மாற்றி  அனைவரும்  வாசிக்கும்  வண்ணம்  மரபுக்  கவிதையை  எழுதி …

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3   தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார்.   வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…

தமிழா எங்கே உன் தாய்? – பாவலர் கருமலைத்தமிழாழன்

உறுதி   ஏற்பாய் ! அன்னையினை   இழிவுசெய்யும்   தமிழா !   வீட்டில்             அருந்தமிழைக்   கொலைசெய்யும்   தமிழா !   நாட்டில் உன்மொழியை   ஏளனமாய்ப்   பேசிப்   பேசி             உயர்மொழியைத்    தாழ்வுசெய்து    கீழ்மை   யானாய் முன்னோர்கள்   வழிவழியாய்ப்   பேணிக்   காத்த             முத்தமிழில்   பிறமொழியின்   மாசைச்   சேர்த்து விண்வெளியில்   ஓசோனைக்   கெடுத்த   தைப்போல்             விளைவித்தாய்   ஊறுதனைத்   தூய்மை   நீக்கி ! வீட்டிற்குள்    புதையலினை   வைத்துக்   கொண்டு             வீதியிலே   எச்சிலிலை    பொறுக்கு   கின்றாய் காட்டிற்கே   எரித்தநிலா   போன்று   சங்கக்             கவின்நூல்கள்   வீணாகக்    கிடக்கு   திங்கே…