ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மதுரைத்தமிழ்ச்சங்கம்குறித்துத் தவறான தகவலைச் சட்டமன்றத்தில் தெரிவித்த ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!   தமிழகச் சட்டமன்றத்தில்(ஆடி12, 2047/சூலை27, 2016) மதுரை மத்தியத்தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அதற்குத் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவர், கருணாசு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கான விளக்கம் தருவதாகச் சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் பழனிவேல் தியாகராசன் தமிழால் முடியாது என்பதுபோல் தெரிவித்துள்ளது தமிழன்பர்களிடையே கோபக்கனலை எழுப்பியுள்ளது. தனக்கு எதிர்ப்பு மிகுந்ததும் தான் தெரிவித்ததைத் தானே மறுத்து மழுப்பியுள்ளார். ஊடகங்களில்…

வள்ளுவரும் அரசியலும் 6 – முனைவர் பா.நடராசன்

 (சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி)   பொருளும் இன்பமும் 2. இங்ஙனம் இன்பத்திற்கு வித்தாகப் பொருளுக்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்குத் துணையிடம் வகுத்த முறையால் சில உண்மைகள் பெறப்படுகின்றன. அரசியல் உரிமை என்பதை விடப் பொருளாதார உரிமையே. தனி மனிதயின்பத்திற்கு வேண்டுவது. இதை குடிகட்காகச் சொல்லப்பெறும் ஒழிபியலில் விளக்க முயல்கிறார். ‘‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’’ என்கிறார். அரச அமைப்பும் சிறப்பும் 3. மேலும் இன்பக் குறிக்கோளுக்குத் துணைக்காரணமாயமையும் அரசியல்…

வள்ளுவரும் அரசியலும் 4 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,

(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)   முதலிலே அவனுக்கு, அரசுக்கு வேண்டிய அங்கங்களான படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை ஆறும். நன்றாக அமைதல் வேண்டும். ஈகை வேண்டும்; அறிவு வேண்டும்; ஊக்கம் வேண்டும்; செயல்களில் விரைவுடைமை வேண்டும்; தூங்காமை ஆகாது; துணிவு வேண்டும்; கல்வி வேண்டும்; அறன் வழி நிற்றல் வேண்டும். அறனல்லவற்றைக் கடியும் வீரம் வேண்டும். காட்சிக்கெளியனாதல் வேண்டும். கடுஞ்சொல் அல்லாதவனாதல் வேண்டும்; இன்சொல் வழங்கி ஈத்தளிக்கும் இயல்பினனாதல் வேண்டும், செங்கோல்…

வள்ளுவரும் அரசியலும் 2 -முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,

  (16 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)   ஏனெனில் குடியாட்சி அமையலாம்; ஆனால் அந்தக் குடியாட்சியில் முறைமை செய்யப்படாத முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகள் நிலை நாட்டப் படாது இருந்தால், நாட்டிலே பொருள் வளம் மிகுதலில்லாது போய்விடும்; அப்போது குறிக்கோளாகிய இன்பம் எய்துவது எவ்வாறு?   நேர்மாறாக முடியாட்சி இருக்கலாம்; ஆனால் அவ்வாட்சியில் நாட்டில் நல்லமைதி நிலவி மக்கள் பொருள் வளம் சிறக்குமானால் அதனால் இழிவென்ன? என்று கேட்பது போலிருக்கிறது வள்ளுவர் அரசியல் கோட்பாடு.   குடியரசுக் கொள்கை தலைசிறந்து நிற்கும் இது காலையில்…

வள்ளுவரும் அரசியலும் – முனைவர் பா.நடராசன்

  வாழ்வின் குறிக்கோள் இன்பம். இன்பம் பொருளால் வருவது. பொருள் அறத்தால் வருவது. அறமே முதற் காரணம். இன்பமே இறுதி விளைவு. இங்ஙனமாக அறம், பொருள் இன்பம் என மூன்றும் சங்கிலித் தொடராக – காரண காரியங்களாக அமைகின்றன.   இம்மூன்றனுள் பொருள் நடுவணதாக அமைந்துள்ளது. பொருள் உண்டாவதற்கும் சிறப்பதற்கும் அறமே அடிப்படைக் காரணமாயினும், அரசியல் இன்றியமையாத அடுத்த காரணமாகும்; துணைக் காரணமாகும். நல்ல அரசாட்சியுண்டேல் நல்ல பொருளாதாரமும் உண்டு. அரசாட்சியின் குறிக்கோள் மக்கள் பொருள் நலம் சிறப்பதேயாகும்.   ஏனெனில் ஆட்சியே பொருளை…