பிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு

ஆவணி 28, 2050 14/09/2019 மாலை 05:00 முதல் இரவு 07:30 மணிவரை மில்டன் கீயின்சு நகர் ( 69 Downs Barn Boulevard, Downs Barn, Milton Keynes, MK14 7NA ) இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலை – கருத்தரங்கம்  இதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும். அதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும்.  இறுதியாக…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30 இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர். தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகப் பகுதியில் 8 மாவட்ட மக்களாகநடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குஅனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு…

கவனயீர்ப்புப் போராட்டம்

கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி 10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1  [அருகிலுள்ள தொடருந்து நிலையம்:  Westminster] தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப்  போராட்டத்திற்கு பிரித்தானியத்  தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது. மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். பிரித்தானியத் தமிழர் பேரவை

பிரித்தானியப் பாராளுமன்றில் பொங்கல் விழா!

பிரித்தானியப் பாராளுமன்றில் முதல் தடவையாகத் தைப்  பொங்கல் விழா!     தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை  அடையாளப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள், அதற்கு  முதன்மையான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றைக் காலங்காலமாக நன்றியுடன் நினைவு கூரும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன.   தம் நிலத்தையும் பரம்பரை இனத்துக்கான அடையாளங்களையும் நிலைக்க…

சிறிலங்கா நம்பகத்தன்மையை மீண்டும் இழக்கத் தொடங்கி விட்டது – பல நாடுகள் மனக்குறை!

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] சிறிலங்கா நம்பகத்தன்மையை மீண்டும் இழக்கத் தொடங்கி விட்டது – பல நாடுகள்   மனக்குறை!      செனீவா ஐ.நா மனித உரிமைக் கழக 35ஆவது அமர்வு (ஆனி 09, 2048/ சூன் 23, 2017 அன்று) நிறைவடைந்துள்ளது. தமிழ் மக்கள் தமது நேரடி வாழ்வியல்  பட்டறிவுகளினூடாக சிறிலங்கா எவ்வாறு நடந்து கொள்ளும் என்று திரும்பத் திரும்ப உலக நாடுகளிற்கு வலியுறுத்தி வந்ததனை பல நாடுகள் ஏற்றுக் கொள்ளும் நிலைமை இன்று உருவாகி வருகின்றது.    2015  அத்தோபரில் நிறைவேற்றப்பட்ட…

இன அழிப்பில் நீதி கோரிப் போராடுவோம்! – இலண்டன்

  ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்! நீதி கோரிப் போராடுவோம்!  வைகாசி 04, 2048 / 18-05-2017, வியாழக்கிழமை     மாலை 5மணி  நிலக்கீழ் தொடருந்து நிலையம்:, இலண்டன் [Hyde Park, London W2 2UH,  Marble Arch]   தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று எமக்குள்ளே  நிறையவே கதைத்தாகி விட்டது. போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் மிலேச்சத்தனமான போரின் காயங்கள் ஆறவில்லை. வீர சுதந்திரம் கோரிய எம் தமிழினம் இன்று தம் நிலத்தை விட்டு உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்டுள்ளது. நம் கடல், நிலம், வீடு,…

பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்-ஐ.நா.மன்றத்தில் அம்பலப்படுத்திய பி.த.பேரவை

பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்   ஐ. நா. சிறப்பு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானியத் தமிழர் பேரவை   செனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 33 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள்,  பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானியத் தமிழர் பேரவை  அளித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.    நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள்…

பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு 23  பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒவ்வோர் ஆண்டும் ஒழுங்கு செய்யப்பட்டு  நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23 ஆம் நாள் பங்குனி மாதம் அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தலைமையாளர் தாவீது கெமரொன் (David Cameron)  வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்குத் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர்   சேம்சு பெர்ரி (James Berry MP) தலைமை வகித்தார்.  தலைமை விருந்தினராகத் தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டுத்துறை அமைச்சர் …