“எளிய இனிய கணினி மொழி” ‘(உ)ரூபி’ க்கு இதைவிடப் பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணையப் பயன்பாடுகள் ‘(உ)ரூபி’ ’யில் எழுதப்படுகின்றன. நிரலைச் சுருக்கமாக எழுதுவதே ‘(உ)ரூபி’ யின் ஆற்றல்வாய்ந்த இயல்புகளில் ஒன்றாகும். கணியன்(software)களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ‘(உ)ரூபி’ யில் உருவாக்க முடியும். ‘(உ)ரூபி’ யின் அடிப்படையையும், பரவலாகப் பயன்படுத்தப்படும் சிறப்புகளையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ‘(உ)ரூபி’ யின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் பரவியிருப்பது அவரது சிறப்பு. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில்…