(அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் மிகுகாமத்தால் அடிமையாகி, மனைவியின் மொழிவழிச் சென்று அறம்மறத்தல். மனைவிழைவார், மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்,      வேண்டாப் பொருளும் அது.       பெண்வழி நடப்பார், பயன்அடையார்;        நல்செயல் வல்லார், விரும்பார்.   பேணாது பெண்விழைவான் ஆக்கம், பெரியதோர்      நாணாக நாணுத் தரும்.   மனைவிக்கு அடிமை ஆகியார்        வளநலம், வெட்கப்படத் தக்கவை.   இல்லாள்கண் தாழ்ந்த இயல்(பு),இன்மை; எஞ்ஞான்றும்,     …