இரு மொழிக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டால் தண்டனை – பாராட்டும் நெறியுரையும்:  இலக்குவனார் திருவள்ளுவன்

இரு மொழிக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டால் தண்டனை – பாராட்டும் நெறியுரையும் வழிகாட்டு சாலைப்பலகைகளில் இந்தி இடம் பெறச்செய்ததை அரசு கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறி உரிய அதிகாரிகளுக்குத் தமிழக அரசு தண்டனை கொடுத்துள்ளது. ஆட்சிமாழிச் செயலாக்கத்திற்கு எதிராகச் செயற்படு வோருக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்  என நாம் பலமுறை இதனை வலியுறுத்திவந்தோம். அதற்கேற்ப அரசின் இரு மொழிக்கொள்கைக்கு எதிராக நடந்து கொண்ட அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுத்தது பாராட்டிற்குரியது.  இதன் தொடர்பில் மேலும் சில செய்திகளை நாம் உணர வேண்டும். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்…

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை! தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும்  மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே, இது முழுமையான மக்கள் மன்றமாக உள்ளது. தற்போது, இந்திய மக்களவையில் (Lok Sabha) நியமன உறுப்பினர்கள் யாரும் இல்லை. 104-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019-இன் மூலம், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தினரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை 2020 சனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களவையில் நியமன உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் (Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல்,  குமுகத் தொண்டு போன்ற துறைகளில் சிறந்த…

82. சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது எனக் கேட்பது சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 81 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 ? 82.சனாதனம், வருணாசிரமம் என்பனவெல்லாம் இப்பொழுது எங்கே உள்ளது என்கிறார்களே! “ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகக் கலந்து விட்டன. இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று என ஒரு சாரார் கூறிக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு விளக்கினாலும் அவர்கள் மரமண்டையில் உண்மை குடி போவதே இல்லை, ஆயினும் அடி மேல் அடி…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – -தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்  பெண்களின் முதன்மைப் பங்கு இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பற்பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றமை போல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தப் போராட்டத்திலும் பெண்கள் ஈடுபாடு இருந்ததில்லை. பெரியார் ஈ. வெ. இராமசாமியும்  எதிர்க்கட்சியான நீதிக்கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய,…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8 : தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 9. பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் பிராமணர்களும் ஆதரவு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். “போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, இலக்குவனார்,  முடியரசன் போன்றோர் ஆதரவளித்தனர்.” (விக்கிபீடியா) . போராட்டக்காரர்களிடம்  பிராமணர் எதிர்ப்பு உணர்வு ஆழமாக ஊன்றி இருந்தது. 100க்கு 3 பேராக உள்ள பிராமணர்களுக்காக 100க்கு 97…

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 7 கட்சிக் கண்ணோட்டமின்றித் தமிழர் அனைவரும் பங்கேற்கும் வகையில் 1938 மொழிப் போரை நடத்த பெரியார் திட்டமிட்டார். அதனால் அரசியல் முகமாகப் பெரியாரும் பண்பாட்டு முகமாக மறைமலையடிகளாரும் நாவலரும் ச.சோமசுந்தர பாரதியாரும் மொழிப்போரில் முன் நிறுத்தப்பட்டனர்.  முதல் மொழிப்போர் வெடிக்கக் கருத்துநிலைத் தூண்டுதலாய் இருந்தோர் மூவர் ஈழத்து சிவானந்த அடிகள், புலவர் அருணகிரிநாதர், அறிஞர் அண்ணா. சென்னையில் இதற்கான பணிகளைத் திட்டமிட்டுக் களம் அமைத்த மூவர் செ.தெ.நாயகம், காஞ்சி மணிமொழியார், சண்முகாநந்த…

தமிழ்நாடு என்றால் திராவிடமே!- பேரறிஞர் அண்ணா

தமிழ்நாடு என்றால் திராவிடமே! தமிழ்நாடு என்று இதுகாறும் பேசியும் எழுதியும் வருவதெல்லாம் தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்ற பொருளோடே யல்லாமல், தமிழ்மொழிப் பிரிவினையையே உடைய கருத்தில் அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில், தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு. என்றும் நாம் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும், “திராவிடமே தமிழ் என்று மாறிற்று” என்றும், “தமிழே . திராவிடம் என்று மாறிற்று” என்றும் சரித்திராசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 13

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 12 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 தொடர்ச்சி மறையூர் வைதிகர்கள் பதைபதைத்தனர். ”வைசிய குலத் திலகர், பக்திமான் செட்டியார், உப்பிரசாதிப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா? அடுக்குமா இந்த அனாச்சாரம்? அது, நமது திவ்விய சேத்திரத்தில் நடப்பதா?” என்று கூக்குரலிட்டனர். செட்டியாரைச் சபித்தனர். ஊரிலே இந்தக் கலியாணம் நடைபெற்றால், பெரிய கலகம் நடக்கும் என்று கூவினர். பழனி, மறை யூரிலும் சுற்றுப்பக்கத்திலும் சென்று சாதி குலம் என்ப தெல்லாம் வீணர்களின் கட்டுக்கதை என்பதை விளக்கிப் பேசினான்,…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 12

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம்  11 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 தொடர்ச்சி “என் குடும்பத்திலே நீ செய்து வைத்த காரியத் துக்கு, ஊரார் எங்களுக்கு மகுடம் சூட்டுவார்களா? மடையா ! ஒரு பெண்ணின் கற்பை அழிக்கத் துணிந்து விட்டு, குலப் பெருமை, குடும்பப் பெருமைகளைக் கூறுகிறாயே, மானமின்றி, ஈவு இரக்கமின்றி!” “நான் வைசிய குலம். ………..”“நான் உப்பிரசாதி . . . . . . . . . . . .” “உப்பிரசாதியில் பெண் கொள்ளும் வழக்கம்,…

அறிஞர் அண்ணாவின்  ஏ, தாழ்ந்த தமிழகமே! 8/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 7/8 தொடர்ச்சி) [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] கொலை வாளினை எடு அந்தக் காலத்திலே இன்னல் ஏற்பட்டால், ‘இட்ட முடன் என் தலையில் இன்னவாறு என்றெழுதி விட்ட சிவனும் செத்து விட்டானோ. முட்டப் பஞ்சமே வந்தாலும் பாரமவனுக்கே’ என்று பாரம் பழிகளை ‘அவன்’ மேல் சுமத்தினார்கள்; பதிலை எதிர்பார்க்காமல் இடைக்காலத்தில், ‘கேட்டவரம் அளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்,…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 11

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 10 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்திலே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேட்டையின் அடையாளங்கள், கன்னத்தில் வடுக்களாகத் தெரிந் தனவேயன்றி, முகம் மலர்ச்சியாகத் தெரியவில்லை. கண் திறந்தாள் ; புதியதோர் இடமாகத் தோன்றிற்று. திகைப்புடன் பார்த்தாள், செட்டியார் மீது சாய்ந்து கொண்டிருப்பதை. “ஐயோ” என்று அலறியபடி எழுந்திருக்கலானாள். செட்டியாரோ, “அன்பே !” என்று கூறி, அவளை மீண்டும் தம் மீது…

அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! 7/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 6/8 தொடர்ச்சி) [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] அறிவுகெட்ட தமிழகம் எங்கே – எடுத்துக் கொள்ளுங்களேன், ஒரு பத்திரிகை “பகவத் கீதையிலே நாலு சாதி இருக்கவேண்டும்” என்று பரமாத்மா கூறியிருக்கிறார் என்று எழுதும். “அது யார் சொன்னது? பகவத் கீதையிலே சாதிக்காதாரமில்லை” என்று ஒரு பத்திரிகை எழுதும், மற்றொரு பத்திரிகை, “நீங்கள் கீதையை வேறு விதமாக…

1 2 … 5