தமிழ்வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்! – வாணிதாசன்

செய்யும் விளைந்தது; தையும் பிறந்தது; செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! – புதுச் செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! பொய்கை புதர்ச்செடி பூக்கள் நிறைந்தன; பொன்னொளி எங்கணுங் கண்டோம்! – புதுப் பொன்னொளி எங்கணுங் கண்டோம்! மாவும் சுளைப்பலா வாழையும்   செந்நெலும் வந்து குவிந்தன வீட்டில்! – தை வந்தது வந்தது நாட்டில்! கூவும் குயிலினம் கூவாக் குயிலினம் தாவிப் பறந்தது மேல்வான்! – ஒளி தாவிப் பறந்தது கீழ்வான்! சிட்டுச் சிறுவரின் செங்கைக் கரும்புகள் தொட்டுப் பிசைந்தன பொங்கல்! – அதை இட்டு மகிழ்ந்தனர் பெண்கள்!…

நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலிட்டு வாழியவே! – மு.பொன்னவைக்கோ.

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்! பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலென பொங்கலிட்டு வாழியவே!  முனைவர் மு.பொன்னவைக்கோ

நம்வாழ்வு விடிந்திடட்டும் ! – எம்.செயராமன்

      வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும் நல்லவை நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் ! இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல் முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் ! நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல் ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள் நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர் சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும் ! மார்கழி மாதமது மனங்குளிர வைத்தாலும் மாமழையும் பேரழிவும் மனம்வருந்தச் செய்ததுவே…

இனிமைத் தமிழெடுத்து இதயம்குளிர வாழ்த்துவோம் ! : கந்தையா – செயம்

  ஆர்கலி  உலகிடை   மார்கழிப்   பெண்ணாள் ஆடிமுடித்தாள்  பின்அவள்  அடிஎடுத்து  வைத்து ” தை தை ” என     நடைபோட்டு  தையலவள்  நடந்ததால் தைத்திங்கள்   பிறந்ததோஅத்     தையே  தமிழ்ப் புத்தாண்டு !   தகுமிகு  முத்தமிழ்   முன்னோர் பத்தாயிரம்  ஆண்டாய்  பழக்கத்தில்  கைக்கொண்ட புத்தாண்டுக்   கொள்கை  பொங்கிய  கடல்பேரழிவில் புதைந்து  போனதை   விதந்தநம்   சான்றோர்கள்கூடி ஆய்ந்து   ஆய்ந்து  அறுபதாண்டின்   முதலாண்டை சிதைந்த   தமிழரிடம்  …

எது பொங்கல்? – பாவலர் அன்பு ஆறுமுகம்

வள்ளுவனார் வகுத்தளித்த இன்பப் பொங்கல் வாழ்வினிலே வெற்றிபெற அன்புப் பொங்கல் தெள்ளுதமிழ் நாட்டினிலே எழுச்சிப் பொங்கல் தேமதுர மொழிபரப்பும் உணர்வுப் பொங்கல் உள்ளுகின்ற சிந்தையெல்லாம் வெற்றிப் பொங்கல் ஓதுவது திருக்குறளே அறிவுப் பொங்கல் கள்ளமில்லா உள்ளந்தான் அமைதிப் பொங்கல் கலைகளினை வளர்ப்பதுவே மகிழ்வுப் பொங்கல்! ஆற்றலினை வளர்ப்பதுதான் வாழ்க்கைப் பொங்கல் ஆணவத்தை அழிப்பதுதான் உயர்வுப் பொங்கல் போற்றுவது பெரியோரை கடமைப் பொங்கல் போலிகளை வேரறுத்தல் கல்விப் பொங்கல் மாற்றத்திற்கு வேண்டும்மறு மலர்ச்சிப் பொங்கல் மடமையிருள் ஒழிப்பதற்கு நெருப்புப் பொங்கல் போற்றுவது தாய்மொழியை, பக்திப் பொங்கல்…