தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (1)
(தோழர் தியாகு எழுதுகிறார் : கலியுகமும் கிருதயுகமும்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! இவர்களை நீங்கள் அறியாதிருக்க முடியாது. ஆனால் இந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்க கவிஞர் தமிழ்ஒளியை உங்களில் பலரும் அறிந்திருக்க மாட்டீர்களோ? செ.து. சஞ்சீவி அவர்கள் அந்தப் பாவலரையும் அவர்தம் படைப்புகளையும் எனக்கு அறிமுகம் செய்வதற்கு முன் நானும் தமிழ்ஒளி குறித்து இருளில்தான் இருந்தேன். அவரைப் பற்றிப் புதுமலரில் எழுதும் படி அன்பர் குறிஞ்சி அழைத்த போது மீண்டும் ஒரு முறை தமிழ்ஒளியில் நனையும் வாய்ப்புப் பெற்றேன். இதோ…
கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்! நாம் விரும்பும் கருத்துகளுக்கேற்ற தலைவர்களைப் பின்பற்றி அவர்களது கட்சியில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். அல்லது நமது கொள்கைகளுக்கேற்ற கட்சியை விரும்பி அதன் தலைவர் மீது பற்று வைக்கின்றோம். ஆனால், நாம் விரும்பும் கொள்கைகளில் இருந்து அல்லது நம்மை ஈர்த்த கொள்கைகளில் இருந்து தலைவர்கள் விலகினாலும், நாம் கொத்தடிமைகளாக இருந்து அவற்றுக்கு மாறான கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவர்களைப் போற்றுகிறோம். இந்தக் கொத்தடிமைத்தனத்தால்தான் நாடு அழிவினைச் சந்திக்கிறது. எனவே, நாம் கொள்கைளுக்கு மாறாகக் கடசியும் தலைவர்களும் தடம் புரண்டால் நம் எதிர்ப்பைத்…
