இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை!   “மெல்ல மெல்லப் படரும் நோய்போல இந்தி எல்லாச் சந்துபொந்துகளிலும் நுழைகிறது; குழைகிறது; நமது தன்மானம் பறிபோகிறது” எனப் பேரறிஞர் அண்ணா அன்றே  எச்சரித்துள்ளார்.  இன்று, இந்தி எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றிக் கிளை பரப்பிக் கொண்டுள்ளது; அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் “எல்லைக்கற்களில் இந்தி” என ஆர்ப்பாட்டம் செய்து என்ன பயன்?  வஞ்சகமாய் வெல்வதுதான் ஆரியத்தின் வழக்கம். அதுபோல்தான் இந்தியும் பொய்யான தகவல்கள் மூலமும் முறையற்ற செயல்கள் மூலமும் மத்திய அரசின் அலுவல்மொழியாக மாறியுள்ளது….

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!     செம்மொழித்தமிழுக்கான விருதுகள் 2011-2012, 2012-2013 ஆகிய ஈராண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.    2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் செ.வை. சண்முகத்துக்கும், குறள் பீட விருது செருமன் நாட்டைச் சேர்ந்த இவா மரியா வில்டெனுக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் கே. ஐயப்பன், எழில் வசந்தன், கே. சவகர் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். .   இதேபோல, 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது “தினமலர்’ ஆசிரியர் முனைவர் இரா. கிருட்டிணமூர்த்திக்கும்,…

பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட முதல்வர் கடும் எதிர்ப்பு

பள்ளிகளில், சமற்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் செயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அதற்கு மாற்றாக, அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பரம்பரை அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்’ என, அறிவுறுத்தி யுள்ளார். இது குறித்து, அவர் தலைமையாளருக்கு எழுதியுள்ள மடலில், மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி – எழுத்தறிவுத் துறையின் செயலர், ஆகத்து, 7 ஆம் நாள் முதல், 13 ஆம் நாள் வரை, சமற்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, மடல் எழுதியுள்ளதை அறிந்தேன்….

பாசகவின் நாடகத்திற்கு எடுத்துக்காட்டு, கச்சத்தீவு நிலைப்பாடு

  – தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013   கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாரதிய சனதா:     “கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது.   “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். கேள்விக்கே இடமில்லை:  இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு…

மத்திய அரசுக்குக் கண்டனம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழகத்திற்குப் போதிய நிதி அளிக்காமல், தமிழகத்தின்  முறையீடுகளைத் தொடர்ந்து மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில்,  கட்சியின் பொதுச் செயலாளர்  செயலலிதா முன்னிலையில் (திசம்பர் 19, 2013 அன்று) நடைபெற்றது. செங்கோட்டையே இலக்கு! பொதுக்குழுவில் பேசிய பொதுச் செயலாளர்  செயலலிதா, “மத்தியில் சரியாக வழி நடத்த ஆளில்லாமல் இந்தியா தடுமாறுகிறது. 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி…