பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி – ஆரூர் தமிழ்நாடன்

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” – என்று முரசறைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.  ஏப்பிரல் 29-இல் அவரது 127-ஆவது பிறந்தநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பிறந்த மாநிலமான புதுவையில், மாநில அரசு அவருக்கு மணிமண்டபம்  அமைக்கவேண்டும் என்றும், அவருக்கு மேலும் சிறப்புகளைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைக்குரல், தமிழன்பர்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது.   தமிழுக்கு வளமும் நலமும் சேர்த்தவர் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மொழிப்பற்றையும் இனப்பற்றையும் தன் உணர்ச்சிமிகும்…

பாரதிதாசன் 125ஆம் பிறந்தநாள் விழா, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைந்து நடத்தும் “பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு” சித்திரை 11, 2047 / 27.04.2016 அன்று பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ்மாமணி மன்னர்மன்னன், கலைமாமணி கோ.பாரதி, புலவர் செந்தலை ந.கவுதமன் கலந்து கொள்ள உள்ளனர்.

பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்

[புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 03.04.2045 – 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற எழுத்துரை] வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக்…