இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39 ஏனைய பாடல்கள்   தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரர்,  செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் சின்னசாமி, ‘கருமவீரர் காமராசர்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘சங்கநிதி பதுமநிதி’, ‘கருமவீரர் காமராசர்’, வள்ளல் ‘அழகப்பச் செட்டியார்’ ‘குறள் வெண்பா’ ஆகிய ஏழு கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.   இருபதாம் நூற்றாண்டில் முதன் முதலாக, தனித்தமிழில் பேச வேண்டும். தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர்…

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! – பழ. நெடுமாறன்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு!   மறைமலையடிகள் 1916-ஆம் ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளில் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்.   வடமொழிக்கோ பிறமொழிகளுக்கோ அவர் எதிரானவர் அல்லர். தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமை மிக்கவர் அவர்.   ஒரு மொழியில் இயல்பாக உள்ள சொற்களைத் தவிர்த்துவிட்டு பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம், அம்மொழி அழியும்…

புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்

புதுச்சேரி ஆளுநர்  தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்  ஆண்டுதோறும் சிலப்பதிகாரவிழாவைப் புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது. இவ்வாண்டு ஆனி 16, 2047 / சூன் 30, 2016 இல் புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகார விழா நடைபெற்றது.  தனித்தமிழ்இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் முனைவர் கனகராசு வரவேற்புரை நிகழ்த்தினார். சிலப்பதிகாரம் பற்றிய பா வரங்கில் மு.பாலசுப்பிரமணியன், இரா.தேவதாசு, ஆறு.செல்வன், சண்முகசுந்தரம், இரா. இள முருகன், நட.இராமமூர்த்தி ஆகிய பாவலர்கள் கலந்து கொண்டனர். புரவலர் கி.கலியபெருமாள் செயல்அறிக்கை படித்தார்….

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள் – மறைமலையடிகள்

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்!   திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, ‘தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு’ என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட காப்பியங்களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டி தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள். –…

தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்!     தமிழ் ஆர்வத்தின் காரணமாகப் பலர் தமிழ் அமைப்புகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நிகழ்ச்சிகள் நடத்துவதில் மனநிறைவு கொள்வோரும் தற்பெருமை அடைவோரும் உண்டு. ஆனால், உண்மையில் அவர்கள்,  தமிழைத் தொலைத்துக்கொண்டு வருகிறோம் என்பதை உணரவில்லை.   தமிழன்பர்கள் எனில், பிற மொழிக்கலப்பை அகற்ற வேண்டுமல்லவா? பிறமொழி எழுத்துகளின் பயன்பாட்டை நீக்க வேண்டுமல்லவா? ஆனால், இன்றைக்குத் தமிழ் விழாக்கள் நடத்துவோரில் மிகப் பெரும்பான்மையர்,  பெயர்களில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்; தலைப்பெழுத்துகளில் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்;  நிகழ்விடம், பணியிடம், முகவரிகள் முதலானவற்றைக்…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 5: இலக்குவனார் திருவள்ளுவன்

5         சங்கப் புலவர்கள் வழியில் மட்டுமல்லாமல் சமயக் குரவர்கள் வழியிலும் பாடல்களை இயற்றியுள்ளார் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள். மாணிக்க வாசகர் இயற்றிய ‘போற்றித் திருவகவல்’ சிவபெருமான் குறித்தது. இதே போல் தமிழ்க்கடல் மறைமலையடிகளை நாடு போற்ற வேண்டும் எனக் கருதிய பேராசிரியர் பின்வருமாறு பாடியுள்ளார்.                   “தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த தலைவனே போற்றி!       தமிழ் காக்கும் மறவர்களின் எண்ணத்தில் நிறைந்திருப்பவரே போற்றி!       இந்தி மொழி என்னும் இருட்படலத்தை விலக்கிய செங்கதிர் ஒளியே போற்றி!       தமிழ்நலம் நாடுவார்…

ஆரியப் பார்ப்பனர் சூழ்ச்சிகளை உரைப்பின் மிக விரியும் – மறைமலை அடிகள்

    இவ்வாரியப் பார்ப்பனர் தமிழையும் தமிழ் நூல்களையும், தமிழரையும், தமிழ்ப் பெரியாரையும், தமிழ்த் தெய்வத்தையும் தாழ்வுபடுத்தி விடும் சூழ்ச்சிகளை எல்லாம் ஈண்டுரைக்கப் புகின் இது மிக விரியும். பொதுவாகத் தமிழ்த் தொடர்புடைய எதனையும் இகழ்ந்தொதுக்குதலே இவர்தம் கடப்பாடு. தாம் அங்ஙனம் ஒதுக்குதற்கு ஏலாமல் ஏற்பதற்குரியது மிகச் சிறந்தது ஏதேனும் ஒன்றைத் தமிழிற் கண்டால் உடனே அஃது ஆரியராகிய தம்மவரிடமிருந்து வந்ததென நாட்டுதற்குத் தக்க ஏற்பாடுகளை எல்லாம் எப்படியோ செய்து வைப்பர். – மறைமலை அடிகள்: வேளாளர் நாகரிகம்:பக்கம் – 21

இறையனார் அகப்பொருள் உரையாளர் சிறப்பு – மறைமலையடிகள்

இறைவன் கண்ட பொருள்வரம்பு அறிந்து சொல்நெறி மாட்சியும் பொருள் நெறிமாட்சியும் அளவையின் விளைவும் தெளிவுற விரித்து சுவைபெற உரைத்த நவையில் புலமையும் மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து சிவனையே முதல் எனச் சிவணிய காட்சியும் சீரிதின் இயைந்த கீரன் -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: திருவொற்றியூர் மும்மணிக்கோவை: 55-61

தமிழ்ச் சிறப்பை ஆரியர் தழுவினர் : மறைமலையடிகள்

  இங்ஙனம் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலேதான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்து, போந்த உயிர்க்கொலை­யினை நிறுத்துதற் பொருட்டாகத் ‘தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்­பட்டனவா­மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதும் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமையானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருந்தினமையானும் ஆரியர்க்கும் தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும்…

இந்நாடு முழுதும் பரவியிருந்தோர் தமிழரே ! – மறைமலையடிகள்

பண்டைக்காலத்தே ஆசியாக் கண்டத்தில் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர். (கேம்பிரிட்ஜின் தொல்லிந்திய வரலாறு) -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 35  

உலகியல் பொருளறிவு பிறரிடம் இல்லை – மறைமலையடிகள்

உலகியல் பொருளறிவு பிறரிடம் இல்லை   இத்துணை நுட்பமான உலகியற் பொருள் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனையப் பழம் புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம் பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்பமும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் பரக்கக் காணலாம். -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 32-33