(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18 தொடர்ச்சி) 19   தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய மருத்துவர்க்கு அமைய வேண்டிய குணங்கள் (இலக்கணங்கள்) பலவும் வாய்க்கப் பெற்றவர் மருந்துவ அறிஞர் இராமச்சந்திரன். ‘           நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்             வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 39 ‘           உற்றான் அளவும் பிணியளவும் காலமும்             கற்றான் கருதிச் சொல்’ 40 ‘           உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று             அப்பாலநாற் கூற்றே மருந்து’ 41 மருத்துவ முறைகளைக் கற்ற மருத்துவன், நோயாளியின்…