அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி     அபுதாபி அரோரா  நிகழ்வுகள் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ‘ஆரோக்கியமென்ற செல்வம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய்ச் சிறப்பு  வல்லுநர் மருத்துவர் ஆர்த்தி  சிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல  முதன்மை, அரிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்புக் காணுரைக்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின்…

அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு) – பாத்திமா மைந்தன்

அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு)   மணமுறிவு / மணவிலக்கு என்பதைக் குறிக்க ‘தலாக்கு’ என்னும் அரபுச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘தலாக்கு’ எனும் சொல்லுக்கு, விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பது பொருளாகும். இதை ‘விவாகரத்து’ என்ற வடமொழி சொல்லாலும் சுட்டுகிறோம். இச்சொல், திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றைக் குறிக்கும்.   இசுலாத்தின் பார்வையில் இல்லறம் ஒரு நல்லறமாகவும், ஓர் ஒப்பந்தமாகவும் உள்ளது. இல்லற வாழ்வு நீடித்து நிலை பெற வேண்டும் என்பதால்தான் திருமணம் செய்வதை இசுலாம் ஊக்குவிக்கிறது.  வாணாள்…

நாடிவந்து நிற்குமன்றோ! – மெல்பேண் செயராமர்

              நாடிவந்து நிற்குமன்றோ!                நாநயம் இருந்துவிட்டால்              நாணயம் நமக்குவரும்              பேய்மனம் கொண்டுவிட்டால்              பிணம்போல ஆகிடுவர்              தூய்மையது மனமேறின்              துட்டகுணம் மறைந்துவிடும்    …

சிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி,கீழக்கரை

சிறாருக்கான மாநில அளவிலான  முதல் சதுரங்கப் போட்டி   மொத்தப் பரிசுத் தொகை :உரூ. 48,000/ + 84 வெற்றிக்கிண்ணங்கள்   இராமநாதபுரம் மாவட்டச் சதுரங்கக் கழகமும் கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான  குழந்தைகளுக்கான முதல் சதுரங்க விளையாட்டுப் போட்டி   கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியில்   கார்த்திகை 04 & 05, 2047 19.11.16 &20.11.16 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 4 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் 9, 11, 13, 15, ஆகிய  அகவைக்குட்பட்ட பள்ளி…

துபாயில் சிறுநீரகப்பாதிப்புற்ற தமிழ்ச்சிறுவனுக்கு மருத்துவப் பொருளுதவி தேவை!

துபாய்  மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால்  மருத்துவம் பெற்று வரும் தமிழகச் சிறுவன் சிகிச்சைக்கான கட்டணம் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் தவித்து வரும் தந்தை, உதவிட வேண்டுகோள்   துபாய் :   துபாய்  மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பினால் தமிழகச் சிறுவன்  (இ)ரீகன் பெய்த்து பால் (அகவை 7)  பண்டுவம்பெற்று வருகிறார். இவரது  மருத்துவக் கட்டணததைச் செலுத்த முடியாமல் வேலையில்லாமல் இருந்து வரும் அவரது தந்தை தவித்து வருகிறார். நல்ல மனம் கொண்டவர்கள் இந்த மருத்துவத்திற்காக உதவிடவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.   துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில்…

தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை

இராசல் கைமா  மருத்துவமனையில் தமிழக இளைஞர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு உதவிடக் கோரிக்கை   இராசல் கைமா :இராசல் கைமாவில் உள்ள சைப்  மருத்துவமனையில்  தமிழக இளைஞர்  இராசு ஞானமுத்து(அகவை 41)  சேர்க்கப்பட்டுள்ளார். அவரைச் சொந்த ஊருக்கு  அனுப்பி வைக்க  வாய்ப்பு உள்ளவர்கள் உதவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகில் உள்ள அனகூட்டம் விளையைச் சேர்ந்தவர் இராசு ஞானமுத்து. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்குள்ள சிறிய உணவகத்திற்கு  வேலைக்காக வந்தார் இராசு ஞானமுத்து.   திடீரென இவருக்கு வாதம்போல்…

தண்ணீர் பிடிக்கத் தாவருவி (ஏ.டி.எம்) – கே.இராசு

தண்ணீர் பிடிக்கத் தாவருவி (ஏ.டி.எம்)   வறட்சி தாண்டவமாடும் மரத்துவாடா பகுதியில் பல கல் (மைல்) தொலைவு நடந்து சென்று ஒரு பானைத் தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலையில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் ஒவ்வோர் ஊரிலும் பார்க்க முடியும். “நீருக்காய் அவள் நடந்த தூரத்தை ஒரு நேர்கோட்டில் இழுத்தால் பூமத்திய ரேகையாகிப் போகும்!”  என்கிறது ஒரு கவிதை. ஆனால், ஔரங்காபாத்து நகரத்தின் அருகில் உள்ள படோடா என்கிற சிற்றூரின் கதை வேறு. சுற்றிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட சிற்றூர்கள் இருந்தாலும் இந்த ஊர் மக்கள்…

துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள்

துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள் ! துபாய் :  மதுரை மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சிற்றூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் துபாயில் பொருளூர்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய்  செபல் அலி (Jebel Ali) பகுதியில் ஏற்படுத்திய  நேர்ச்சியின்(விபத்தின்)போது கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இந்த  நேர்ச்சியை ஏற்படுத்தியதற்காக நூறாயிரம் திர்ஃகாம் மரணமடைந்தவரின் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த  நேர்ச்சியில் தொடர்புடையவருக்குக் காப்பீட்டு நிறுவனம் சில காரணங்களைக் கூறி இழப்பீடு வழங்க மறுத்து…

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான  சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)   துபாயில் செயல்பட்டு வரும்  தூதஞ்சல் நிறுவனமான எம்ஃச்டார் (EMSTAR COURIER & CARGO LLC) அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் தூது அஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது. சரக்கு(கார்கோ)க்கு அயிரைக்கல்(கிலோ) ஒன்றுக்கு 10 திர்ஃகாம்  கட்டணமாகப் பெறப்படுகிறது.   பொதிவுச்சிப்பம் (packing).வான்வழிக் கட்டணம் தனி. அமீரகம், வளைகுடா, இந்தியா முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்கும்  தூதஞ்சல் பணி இருந்து வருகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள எம்ஃச்டார்  தூதஞ்சல் பணியூழியத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய…

சார்சா இரோலா பகுதியில் முதல் வாரந்தோறும் பல்மருத்துவ முகாம்

  சார்சா இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்வகை மருத்துவமனையில் பல் மருத்துவ   இலவச முகாம் அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது.   இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 06 – 5685 022 , 0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   அனைவரும் பயன்பெறும் வகையில்…

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு

அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29  ஆம் நாள் தொடங்கி  பிப்பிரவாி 7  ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள்…

சார்சாவில் பல் மருத்துவ இலவச முகாம்

சார்சா (உ)ரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்துறை மருத்துவக்கூடத்தில் இலவச பல் மருத்துவ முகாம் சனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த   மருத்துவர் சிராசுதீன்  பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான  மருத்துவம்  குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர் 06 – 5685 022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   – முதுவை இதாயத்து