இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  18 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  17 –  தொடர்ச்சி) வாழ்வியல் உண்மைகளை மக்களுக்கு அறிவுறுத்த முற்படுபவர்கள் சான்றோர்கள் எனச் சிறப்பிக்கப்படுவார்கள்.  இவர்களே உயர்ந்தோர் என மதிக்கப்படும் தகுதியுடையவர்கள்.  இவ் வுயர்ந்தோர் வழியே ஏனையோர் செல்லுதல் வேண்டும் என்பது பழந்தமிழர் கொள்கை. உயர்ந்தோர் வழக்குத்தான் உலக வழக்காகக் கருதப்பட்டது.  உலக நிகழ்ச்சியை இயக்க வேண்டியவர்கள் உயர்ந்தோர்களே என எண்ணினர். “வழக்குஎனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான”   (தொல்காப்பியம், பொருளதிகாரம்,…