செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! நீயே, செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை! வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில் செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை! உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம் இறவா மொழியால் எழுந்திடப் பாடினை! ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில் தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை! கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை! புதுவை பொரித்த புரட்சிக் குயிலே! எதுவும் யாரும் இணையுனக் கில்லை! ‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர் வினைசா வெனின்அச் சாநாள்…