மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 73

(குறிஞ்சி மலர்  72 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 26 தொடர்ச்சி “தோட்டத்துப் பக்கமாகப் போனான். நீங்கள் வேண்டுமானால் போய்ச் சொல்லிப் பாருங்கள்” என்று நம்பிக்கையில்லாத குரலில் பதில் சொன்னார் மீனாட்சிசுந்தரம். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனைத் தேடிக் கொண்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள். அப்போது காரில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மலையைச் சுற்றிக் காட்டுவதற்காகப் போயிருந்த முருகானந்தமும் வசந்தாவும் திரும்பி வந்தார்கள். வசந்தா காரிலிருந்து குழந்தைகளை இறக்கி உள்ளே கூட்டிக் கொண்டு போனாள். முருகானந்தம் மீனாட்சிசுந்தரத்துக்கு அருகில் வந்து மரியாதையோடு அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டான். “உட்கார் தம்பி. உன்னிடம்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  64

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 63 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 23 தொடர்ச்சி மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  63

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 62 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 23 கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து – இங்குஉள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?     – சித்தர் பாடல் ஒரே கரும்பின் ஒரு பகுதி இனிப்பாகவும் மற்றொரு பகுதி உப்பாகவும் இருக்கிற மாதிரி மனிதனுக்குள் நல்லதும் கெட்டதும் ஆகிய பல்வேறு சுவைகளும், வெவ்வேறு உணர்ச்சிகளும் கலந்து இணைந்திருக்கின்றன. எல்லா கணுக்களுமே உப்பாக இருக்கிற ஒருவகைக் கரும்பு உண்டு. அதற்குப் ‘பேய்க்கரும்பு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்குக் கரும்பு போலவே தோற்றம் இருக்கும். ஆனால் கரும்பின் இனிமைச்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  62

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  61 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 22 தொடர்ச்சி “நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா!” என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  61

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  60 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 22 தொடர்ச்சி அப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சிசுந்தரத்தையும், முருகானந்தத்தையும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி. “நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  60

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  59 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 22 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடினேன் பசியினால் இளைத்தேன்வீடுதோ றிரந்து பசியறாது அயர்ந்தவெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்நீடிய பிணியால் வருந்துகின்றோரென்நேருறக் கண்டுளந் துடித்தேன்ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சுஇளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.      — திருவருட்பா தந்தியில் தெரிவித்திருந்தபடி அரவிந்தன் கோடைக்கானலுக்கு வரமுடியாமல் சொந்தக் கிராமத்துக்குப் போக நேர்ந்த காரணத்தை முதலில் பூரணிக்கு விவரித்தார் மீனாட்சிசுந்தரம். அவன் வராதது அவளுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதை மிக நுணுக்கமாக அவர் புரிந்து கொண்டார். அந்த ஏமாற்றம் வெளியே தெரிந்து விடாமல்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  59

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி  சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும் பாதிப் புத்தகம் படித்து நிறுத்தினாற் போல் முடித்துக் கொண்ட விதத்தையும் நினைத்தால் அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. தந்தி வந்தபோது மீனாட்சிசுந்தரமும் முருகானந்தமும் அருகில் இருந்தனர். தந்திச் செய்தியை அவர்களும் படித்து அறிந்து கொண்டிருந்தனர். ‘ஏறக்குறைய இலட்ச ரூபாய் சொத்துக்காரர் இறந்து போயிருக்கிறார். அவ்வளவுக்கும் உரிமையாளனாகப் போகிற இவன் ஏன் இப்படி ஒரு பரபரப்பும் அடையாமல் மலைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறான்?’ என்று அரவிந்தனைப் பற்றி நினைத்தார்கள்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி இரவு எல்லாரும் உறங்கின பின் தனக்குச் சொந்தமான இரண்டு மூன்று அழுக்குச் சட்டை, துணிகளையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு இரயில் பாதை வழியாக நடக்க ஆரம்பித்து விட்டான். பயங்கரமான இருளில் தண்டவாளத்தையும் சரளைக் கற்களையும் மாறி மிதித்துக் கொண்டே முழங்காலில் சிராய்த்துக் காயம்படுவதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். மதுரையிலிருந்து கிழக்கே இராமேசுவரம் செல்லும் இரயில் பாதையின் அருகில் மதுரையிலிருந்து பதினெட்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துதான் மதுரையை நோக்கி அவன் புறப்பட்டிருந்தான். ஏன்?…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  56 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 21 நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்கனற்புகைய வேகின்றான். . .     – புகழேந்தி முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்தமும்தான் கோடைக்கானலுக்குப் புறப்படுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது. அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக் கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லாவிட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத்தான் அவர்கள் உறவினர்கள், உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள், அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்;…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  56

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  55 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி அவள் துன்பப்பட்டிருக்கிறாள்! பொறுப்புகளைச் சமாளித்திருக்கிறாள். வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக் கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை. கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே மனத்தில் சிந்தனைகளைக் காண்பது சுகமாக இருந்தது. சமையற்கார அம்மாள் வந்து ‘மருந்து சாப்பிட வேண்டிய நேரம்’ என்று நினைவுபடுத்திய போது தான்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  55

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  54 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி  ‘உன் விருப்பம் தெரிந்து இந்தக் கடிதங்களுக்கு நான் மறுமொழி எழுத வேண்டும். அல்லது நீயே அவர்களுக்குத் தனித்தனியே பதில் கடிதம் எழுதி விடலாம். எங்கள் எல்லோருடைய அபிப்பிராயமும் நீ இவற்றுக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதுதான். உடல்நிலைப் பற்றிக் கவலைப்படாதே! இவற்றில் கலந்து கொண்டு அடைகிற உற்சாகமும் கலகலப்புமே உன் உடம்பைத் தேற்றிவிடும் என்பது எங்கள் கருத்து. மேலும் அவை எல்லாவற்றுக்கும் நீ ஒப்புக் கொண்டாலும் முழுமையாக இன்னும் இரண்டு மாத கால…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  54

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  53 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்20 “ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப்பிறவனைத்தும் தானாகி நீயாய் நின்றாய்தானேதும் அறியாமே என்னுள் வந்துநல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்”      — தேவாரம் மேகங்கள் குவிந்து திரண்ட கருநீலவானின் கீழே அன்று அந்த அந்தி மாலைப்போது கோடைக்கானலுக்கே தனி அழகை அளித்தது. யூகலிப்புடசு மரங்களின் மருந்து மணத்தை அள்ளிக் கொண்டு வரும் காற்று, உடற்சூட்டுக்கு இதமான கிளர்ச்சி. கண்களுக்குப் பசுமையான காட்சிகள், பகலிலும் வெய்யில் தெரியாதது போல் நீலக்கருக்கிருட்டு, மந்தார நிலை. உலாவச்…