சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்

 சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000  கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்     தன் சொந்த நாட்டில் குடியுரிமை, சாதிச்சான்றிதழ் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் சமூகங்களில் ஒன்று மலைவேடன் சமூகம். இந்தியாவில் சாதியை வைத்தே அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள். அதே வேளையில் சாதிச்சான்றிதழுக்காகவும் அலைக்கழிக்கப்படுகிறது ஒரு சமூகம். தேனி மாவட்டத்தில் பரசுராமபுரம், மீனாட்சிபுரம் அதன் அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு முதலான பகுதிகளில் மலைவேடன் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் மலைவேடன் சமூகத்திற்காக ஒரு வகுதியும்(வார்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்…

தேவதானப்பட்டியில் நிலங்களைக் கைப்பற்றும் கும்பல்

தேவதானப்பட்டிப் பகுதியில் இடைத்தரகர்கள் மூலம் நிலங்களைக் கைப்பற்றும் கும்பல்   தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நிலங்களை வத்தலக்குண்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள், இடைத்தரகர்கள் சேர்ந்து நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, தேவதானப்பட்டி கிழக்குப்பகுதி, புல்லக்காபட்டி, அட்டணம்பட்டி, கோட்டார்பட்டி முதலான ஊர்களுக்கு வத்தலக்குண்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில்தான் பத்திரப்பதிவு நடக்கும். கடந்த 3 ஆண்டுகளாகப் போதியமழையின்மையால் இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் திருப்பூர், கோயம்புத்தூர், கேரளா போன்ற பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் இடைத்தரகர்கள், பத்திரப்பதிவு செய்பவர்கள் ஆகியோர்…

வத்தலக்குண்டு நகரில் கலை இலக்கிய மாலை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் கலை இலக்கிய மாலை   திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் வானொலித்திடலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாகக் கலை இலக்கிய மாலைமார்கழி 5, 2045 / 20.12.2014 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் கருத்தரங்கம், ஊரகக் கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பரம்பரைக் கலையான கோட்டைப்பட்டி தேவராட்டம், நையாண்டி மேளம், பள்ளி மாணவ, மாணாக்கியர்களின் கலைநிகழ்ச்சிகள் முதலானவை நடைபெற்றன.   பேராசிரியர் தண்டபாணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.   திண்டுக்கல்…