வள்ளுவனார் அறத்துப்பால்   1. கற்றாரோ வள்ளுவனார் அறத்துப் பாலை  கற்றிலாரும் அறத்தாள்வார் பெயரும் பெற்று சுற்றிடுவார் நிலமதிலே ஈகை இல்லா  துப்பில்லா மானிடரும் மாடே ஒப்பர் பெற்றிடுவோம் நற்பெயரும் அவனின் பாவால்  பேறுலகைக் காத்திடுமாம் அறமே செய்து சொற்றெடராய் அணிசெய்யும் அழகாய் நன்று  தொடர்வதுவும் குறளோதிப் பணிந்து செய்ய. 2. கொன்றார்கு உய்வில்லை செய்த நன்றி  கோமகற்கும் அதுவேயாம் மாற்று இல்லை சென்றார்க்கும் சிறப்பேயாம் கற்ற கல்வி  தீமையிலாச் சொல்பகரின் செவியில் இன்பம் வென்றாரும் பகைமையுமே வலிமை கண்டே  மேன்மக்கட் பேறுபெரும் அறமே…