‘சமசுகிருதம் முதலில் தோன்றியதா…அல்லது தமிழ் முதலில் தோன்றியதா’ – நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. சரி…இப்பொழுது பதிவுக்குச் செல்வோம்.    இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் சோன்சும் மாக்சு…