வாக்குச் சீட்டு காகிதமா ? ஆயுதமா ? – இரவி கல்யாணராமன்

வாக்குச் சீட்டு காகிதமா? ஆயுதமா? நெஞ்சைப் பிழிந்து கண்ணீர் மல்கக் கெஞ்சிக் கேட்கிறேன் அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் அடிமையாகி வீழ்ந்தது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நோக்குங்கள் எங்கும் உங்கள் குரலொலிக் கட்டும் தானம் இலஞ்சம் மறுத்து விடுங்கள் – தன் மானம் காக்க வாக்களியுங்கள் நேர்மை, துணிவு, பணிவெல்லாம் தேர்வு செய்து வாக்களியுங்கள் உங்களுக் காக உழைப்பேன் என்று வேலை கேட்டு வருகிறார்கள் வேட்பாளர்களாய் வீதிதோறும் வாக்கு கேட்டு வருகிறார்கள் பரப்புரையை நிறுத்தி விட்டுச் சிக்கல்களைக் கேட்கச் சொல்லுங்கள் அடக்கமாக வரச் சொல்லுங்கள்…

முகவரி அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்! – வல்வை சுயேன்

முகவரி அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்! முகவரி அற்ற மந்தையாய் வீதியில் மனிதன் அச்சடித்த வாக்குச் சீட்டில் அழ கழகாய் அவனின் பெயர்.. வறுமைக் கோட்டின் வரிகளைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது கடந்த தேர்தலில் கிடைத்த புத்தாடை அவன் மேனியைக் கந்தல் கந்தலாய்.. அரசுடமைக் களவாணிகள் கட்சிக் கொடியுடன் ஐந்தாண்டுக் கொருமுறை வேட்டித்  துண்டுடன் குசேலரின் வாக்குச் சீட்டில் கறுப்புப் பண குபேரர்கள் நாற்காலியில்.. அங்கம் எங்கும் தங்க நகை அது உறங்க பணக்கத்தை மெத்தை வீதி வாசி ஓலைப் பாயும் இன்றி…